தமிழ்நாடு

tamil nadu

TANCET, CEETA நுழைவுத் தேர்வுகளுக்கு பிப்.1 முதல் விண்ணப்பிக்கலாம்!

By

Published : Jan 29, 2023, 6:26 PM IST

எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான டான்செட் தேர்வு மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணாப் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

tancet
tancet

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு முதல், முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான் ஆகியவற்றிற்கு CEETA என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படவுள்ளது. எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கு வழக்கம்போல் டான்செட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் இந்த இரு தேர்வுகளுக்கும் விண்ணப்பிப்பதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலைக் கழக பொதுநுழைவுத்தேர்வு செயலாளர் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "டான்செட் (TANCET) மற்றும் சீட்டா (CEETA) நுழைவுத் தேர்வுகளுக்கு வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

டான்செட் தேர்வுக்கு எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவு மாணவர்களுக்கு 500 ரூபாயும், பிற வகுப்பினருக்கு 1,000 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டான்செட் பொது நுழைவுத்தேர்வு மார்ச் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது.

முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான சீட்டா தேர்வில், எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவு மாணவர்களுக்கு 750 ரூபாயும், இதர பிரிவினருக்கு 1,500 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்தாய்வு கட்டணமும் அடங்கும். சீட்டா நுழைவுத்தேர்வு மார்ச் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த இரு தேர்வுகளுக்கும் tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதே தளத்தில் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் " என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கொடிவேரி அணை அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்

ABOUT THE AUTHOR

...view details