சென்னை: அக்டோபர் மாதத்தில் அடுத்து, அடுத்து வரும் திருவிழாக்களை முன்னிட்டு தெற்கு ரயில்வே திருவிழா சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
இதன்படி, ரயில் எண்கள்: 06049/06050 கொண்ட சிறப்பு ரயில் "தாம்பரம் ரயில் நிலையம் - மங்களூரூ - தாம்பரம் ரயில் நிலையம்" செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலில் 2 குளிர்சாதனப்பெட்டிகள், 09 படக்கை வசதிகள் கொண்ட பெட்டிகள், 05 இருக்கை வசதிகள் கொண்ட பெட்டிகள் மற்றும் 02 இருக்கை வசதிகள் கொண்ட பெட்டிகள் (மாற்றுத்திறனாளிகள்)
ரயில் எண்: 06049 கொண்ட சிறப்பு ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து செப்டம்பர் 30, அக்டோபர் 06, 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) புறப்பட்டு மேலே குறிப்பிட்ட நாட்களில் மதியம் 1.30க்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு மங்களூரூ ரயில் நிலையம் சென்றடைகிறது.
மறுமார்க்கமாக ரயில் எண்: 06050 கொண்ட சிறப்பு ரயில்கள் மங்களூரூ ரயில் நிலையத்திலிருந்து செப்டம்பர் 30, அக்டோபர் 07, 14, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) புறப்பட்டு மேலே குறிப்பிட்ட நாட்களில் மதியம் 12 மணிக்கு மங்களூரிலிருந்து புறப்பட்டு காலை 05.00 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையம் சென்றடைகிறது.
இதையும் படிங்க:வந்தே பாரத்தால் வைகைக்கு வந்த சோதனை! பயண நேரத்தை குறைக்கக் கூறிய பயணிகளுக்கு தென்னக ரயில்வே கொடுத்த சர்ப்ரைஸ்!
இதே போல் ரயில் எண்கள்: 06061/06062 கொண்ட சிறப்பு ரயில் "தாம்பரம் ரயில் நிலையம் - திருச்சி ரயில் நிலையம் - தாம்பரம் ரயில் நிலையம்" செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் எண்: 06061 கொண்ட சிறப்பு ரயில் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து செப்டம்பர் 30ஆம் தேதி இரவு 10.30க்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.10 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் சென்றடைகிறது.
இந்த சிறப்பு ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர் வழியாக திருச்சி ரயில் நிலையம் சென்றடைகிறது.
மறுமார்க்கமாக ரயில் எண்: 06062 சிறப்பு ரயில் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து அக்டோபர் 01ஆம் தேதி இரவு 10.45மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.10 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையம் சென்றடைகிறது.
மறுமார்க்கமாக இந்த சிறப்பு ரயில் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு திருவெறும்பூர், பூதலூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் வழியாக தாம்பரம் ரயில் நிலையம் சென்றடைகிறது.
இதையும் படிங்க:தாம்பரம் - மங்களூர் ஆயுத பூஜை சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!
இதே போல் ரயில் எண்கள்: 06907/06908 கொண்ட பாரத் கௌரவ் சேவை சிறப்பு ரயில் "சென்னை ஏழும்பூர் ரயில் நிலையம் - சாய்நகர் ஷீரடி ரயில் நிலையம் - சென்னை ஏழும்பூர் ரயில் நிலையம்" செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் 1- முதல் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி, 1- இரண்டாம் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி, 6- மூன்றாம் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள், 3- படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் உள்ளன.
ரயில் எண்: 06907 கொண்ட பாரத் கௌரவ் சேவை சிறப்பு ரயில் சென்னை ஏழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று (செப்டம்பர் 28) மதியம் 2.00 மணிக்கு புறப்பட்டு செப்டம்பர் 30 தேதி காலை 06.30 மணிக்கு சாய்நகர் ஷீரடி ரயில் நிலையம் சென்றடைகிறது.
மறுமார்க்கமாக இந்த சிறப்பு ரயில் சாய்நகர் ஷீரடி ரயில் நிலையத்திலிருந்து அக்டோபர் 1ஆம் தேதி மாலை 07.35 மணிக்கு புறப்பட்டு அக்டோபர் 3ஆம் தேதி காலை 08.30 மணிக்கு சென்னை ஏழும்பூர் ரயில் நிலையம் சென்றடைகிறது. என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:"407 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை" - சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி!