ETV Bharat / state

தாம்பரம் - மங்களூர் ஆயுத பூஜை சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 10:56 PM IST

Tambaram To Mangalore special train: செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 28 வரை தாம்பரம் - மங்களூர் - தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Southern Railway Announced Tambaram to Mangalore weekly special trains
ஆயுதபூஜை சிறப்பு ரயில்

சென்னை: பண்டிகை காலங்களில் பல பகுதிகளில் இருந்தும் சொந்த ஊருக்குத் திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வருகிற ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே அதன் X சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - மங்களூர் - தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: சென்னை - திருப்பதி இடையே 6 ரயில்கள் 15 நாட்களுக்கு ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்புக்கான காரணம் என்ன?

தாம்பரத்தில் 06049 என்ற வாராந்திர சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமைதோறும் செப்டம்பர் 29, அக்டோபர் 6, 13, 20, 27 தேதிகளில் 13.30 மணிக்கு புறப்பட்டு. மறுநாள் 7.30 மணிக்கு மங்களூர் சென்றடையும். அதேபோல் மறுமார்க்கத்தில் மங்களூரில் இருந்து 06050 என்ற வாராந்திர சிறப்பு ரயில் சனிக்கிழமைதோறும் செப்டம்பர் 30, அக்டோபர் 7, 14, 21, 28 தேதிகளில் 12 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் 5 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலில் 2 முதல் வகுப்பு ஏசி பெட்டிகள், 9 ஸ்லீப்பர் பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 திவ்யாஞ்சன் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிவிரைவு ரயிலாக மாறிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ்.. அக்.1 முதல் நேரம் மாற்றம்.. தென்மாவட்ட ரயில் பயணிகள் ஹேப்பி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.