தமிழ்நாடு

tamil nadu

மயிலாப்பூர் அரசு மதுபானக்கடையில் ரூ.15 லட்சம் கொள்ளை

By

Published : Feb 25, 2020, 7:33 AM IST

சென்னை: மயிலாப்பூர் பகுதியில் உள்ள அரசு மதுபானக்கடையில் ரூ.15 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

mylapore-tasmac
mylapore-tasmac

சென்னை மயிலாப்பூர் பல்லக்கு பகுதியில் அரசு மதுபானக்கடை ஒன்று அமைந்துள்ளது. வழக்கம்போல் நேற்றிரவு கடையை பூட்டிவிட்டுச் சென்ற கடையின் கண்காணிப்பாளர், இன்று காலை மதுபானக்கடையை திறந்து பார்த்தபோது கடையின் பின்பக்க பூட்டு உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர், கள்ளாவை சென்று பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மயிலாப்பூர் அரசு மதுபானக்கடை

அதுமட்டுமல்லாமல், கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா, அலாரம் உள்ளிட்டவை உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக அவர்புகார்அளித்தார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அருகாமையில் உள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பல்லடத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணம், நகைகள் கொள்ளை!

ABOUT THE AUTHOR

...view details