ETV Bharat / state

பல்லடத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணம், நகைகள் கொள்ளை!

author img

By

Published : Feb 24, 2020, 4:43 PM IST

திருப்பூர்: பல்லடம் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஜன்னலை உடைத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள், பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Robbery at State Bank Branch Palladam SBI Bank Roberry Bank Roberry Tiruppur SBI Bank Roberry திருப்பூர் ஸ்டேட் வங்கி கொள்ளை பல்லடம் ஸ்டேட் வங்கி கொள்ளை
Palladam SBI Bank Roberry

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளிபாளையம் பகுதியில் பாரத் ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. விடுமுறை முடிந்து இன்று காலை வங்கிப் பணிக்கு ஊழியர்கள் வந்தனர். அப்போது, வங்கி உள்ளே சென்று பார்த்தபோது, லாக்கர்கள் உடைக்கப்பட்டு பணம், நகைகள் கொள்ளை போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக காமநாயக்கன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வங்கியின் பின்புறம் இருந்த ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் வங்கியில் இருந்த பணம், லாக்கரில் வைக்கப்பட்டிருந்த வாடிக்கையாளர்களின் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

கொள்ளை போன வங்கியில், திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் திஷா மிட்டல், பல்லடம் துணை கண்காணிப்பாளர் முருகவேல் ஆகியோர் பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, இந்த வங்கியில் ஜன்னல் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

கொள்ளை முயற்சி சம்பவத்தை அடுத்து, அந்த வங்கிக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்தப் பாதுகாப்பு விலக்கப்பட்டது. இதனை அறிந்த அடையாளம் தெரியாத நபர்கள் வங்கிக்குள் புகுந்து கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

பல்லடத்தில் கொள்ளையடிக்கப்பட்ட வங்கி.

கொள்ளையர்கள் வங்கியில் வைத்திருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்தும், அதிலிருந்த ஹார்டு டிஸ்க்குகளையும் திருடிச் சென்றுள்ளதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

இந்தக் கொள்ளையில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள், பணம் கொள்ளை போய் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையில் தப்பியோடிய அடையாளம் தெரியாத கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:39 ஆண்டுகளுக்குப் பிறகு, பயிற்சிப் பள்ளியில் பெண் காவலர்கள் சந்திப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.