தமிழ்நாடு

tamil nadu

ரஜினிக்கு காய்ச்சலா? - விளக்கம் கொடுத்த பிஆர்ஓ

By

Published : Nov 22, 2020, 9:04 PM IST

நடிகர் ரஜினிகாந்திற்கு உடல்நிலை சரியில்லை என்று பரவிய செய்தி பொய்யானது என்று அவரது பிஆர்ஓ விளக்கம் கொடுத்துள்ளார்.

ரஜினி
ரஜினி

நடிகர் ரஜினிகாந்திற்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவர் தனது பண்னை வீட்டில் சிகிச்சை பெற்று வருவாதாகவும் காலை முதல் செய்தி வெளியானது. இதனால் ரஜினி ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அவரது பிஆர்ஓ ரியாஸ் அகமது விளக்கம் அளித்துள்ளார். அவர், “ரஜினிக்கு காய்ச்சல் என்று பரவும் செய்தியை யாரும் நம்ப வேண்டாம். அவர் போயஸ் தோட்டத்தில் உள்ள தனது வீட்டில்தான் இருக்கிறார். இதுபோன்ற உண்மைக்கு புறம்பான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் பேட்ட படத்திற்கு பிறகு, தற்போது ’அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடும் ரஜினி

ABOUT THE AUTHOR

...view details