ETV Bharat / sitara

குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடும் ரஜினி

author img

By

Published : Nov 14, 2020, 3:28 PM IST

சென்னை: ரஜினி தனது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடும் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.

Rajini
Rajini

தீபாவளி பண்டிகை, நாடு முழுவதும் இன்று (நவம்பர் 14) வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது. தீபாவளியை முன்னிட்டு, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பல்வேறு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் மக்களுக்குத் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்தனர்.

அந்தவகையில் இன்று காலை போயஸ் கார்டனிலுள்ள தனது வீட்டின் முன்பாகக் குவிந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தனது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதனால் அங்கு கூடிய அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

  • Wishing everyone a very safe and Happy Diwali 🪔💫🌟 from our family to yours ❤️❤️❤️ Spread love and positivity .. Trust and surrender to the almighty !!!! 😇🙏🏻😇🌟 gods and gurus will always bless us #StaySafe #BeResponsible #GoCorona 🙏🏻🙏🏻😇😇 pic.twitter.com/5EuT1KdYEV

    — soundarya rajnikanth (@soundaryaarajni) November 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனையடுத்து ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா தனது கணவர், மகன், தந்தை ரஜினி, தயார் லதாவுடன் தீபாவளி கொண்டாடும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் ரஜினி தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடிவருகிறார். தற்போது இந்தப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.