தமிழ்நாடு

tamil nadu

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2023, 5:02 PM IST

Tamilnadu Weather Report: வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வரக்கூடிய காரணத்தினால் நவம்பர் 6 முதல் 11ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain-for-the-next-6-days-due-to-atmospheric-circulation-in-tn
தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்!

சென்னை:வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வரக்கூடிய காரணத்தினால் இன்று (நவ.5) தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (நவ.5) நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட பகுதிகளில் ஓரிடங்களில் கனமழை முதல் மிகக் கனமழையும், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளைய தினம் நவம்பர் 6ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்.

இதையும் படிங்க:66 அடியாக உயர்ந்த வைகை அணையின் நீர்மட்டம்! 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நவம்பர் 7ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்.

நவம்பர் 8ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்.

நவம்பர் 9ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் நவம்பர் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் தமிழக மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:coutrallam season: குற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்..! வார விடுமுறையை கொண்டாடும் சுற்றுலாப் பயணிகள்!

ABOUT THE AUTHOR

...view details