தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு!

By

Published : Jul 29, 2021, 9:22 PM IST

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் இறுதிப்பருவ செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

open-university-exam-result
open-university-exam-result

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் ஜூன், ஜூலை இறுதி பருவ செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்த தேர்வில் பங்கேற்று எழுதிய 19 ஆயிரத்து 184 மாணவர்களில் 18 ஆயிரத்து 727 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி விகிதம் 97.2 சதவீதமாகும்.

www.tnou.ac.in என்கிற இணையதள முகவரியில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறியலாம். இதே இணையதள முகவரியில் மறுகூட்டல், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

இறுதியாண்டு தவிர்த்து மற்ற ஆண்டுகளில் அரியர் வைத்த மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்ட நிலையில், அரியர் மாணவர்களும் தேர்வுகளை எழுத வேண்டும் என்கிற நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரியர் மாணவர்களும் செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை பசுமையாக இருக்க வேண்டும் - ககன்தீப் சிங் பேடி

ABOUT THE AUTHOR

...view details