ETV Bharat / state

சென்னை பசுமையாக இருக்க வேண்டும் - ககன்தீப் சிங் பேடி

author img

By

Published : Jul 29, 2021, 7:09 PM IST

சென்னை பசுமையாக இருக்க வேண்டும் என்பது எங்களது நோக்கம் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமையாக இருக்க வேண்டும்
சென்னை பசுமையாக இருக்க வேண்டும்

சென்னை: மாநகரம் முழுவதும் மரம் வளர்ப்பு முறையை மாநகராட்சி துரிதப்படுத்தியுள்ளது. இந்நிலையில் குடியிருப்பு நல சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "200க்கும் மேற்பட்ட குடியிருப்பு நல சங்கங்கள் உடன் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி சாலை போடும்போது மரம் நடுவதற்கு விருப்பப்பட்டால் மாநகராட்சி சார்பில் அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.

ஒவ்வொரு குடியிருப்பு நல சங்கங்களும் குறைந்தது ஒரு ஆண்டுக்கு 500-க்கும் மேற்பட்ட மரங்கள் நடவேண்டும். 6 அடி உயரத்தில் இருந்தால் அவை பாதுகாப்பாக வளரும் சூழல் இருக்கும். மரங்கள் நடும்போது, உள்ளூரில் உள்ள மரங்களை வைத்தால் புயல் போன்ற பேரிடர்களின்போது பாதுகாப்பாக இருக்கும்.

சென்னை பசுமையாக இருக்க வேண்டும் என்பது எங்களது நோக்கம், அதற்கு முக்கியமாக மக்களின் பங்கு அதிகம் எங்களுக்கு தேவை. மரம் நடுவது மக்கள் இயக்கம், எனவே குடியிருப்பு நல சங்கங்கள் ஒரு மரத்தை நட்டால் அதை நன்றாக தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும்.

குறைந்தது ஒரு ஆண்டாவது அந்த மரத்திற்கு தண்ணீர் விட வேண்டும். இந்த மரத்துக்கு தேவையான உரத்தை மாநகராட்சி இலவசமாக வழங்க தயாராக உள்ளது. மரங்களை நன்றாக பராமரிக்கும் குடியிருப்பு நல சங்கங்களுக்கு மாநகராட்சி சார்பாக விருது வழங்கப்படும்.

சென்னை பசுமையாக இருக்க வேண்டும்

மாசு அதிகமாக உள்ள இடங்களில் அதிக மரங்கள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆற்றோரங்களில் மரங்கள் வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மக்கள் பல இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருக்கின்றனர். மாநகராட்சி தினமும் லட்சக்கணக்கில் அபராதம் விதித்தாலும் அவர்கள் அதை பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. எனவே மக்கள் கரோனா குறித்த அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். 3-ஆம் அலை வந்தால் முக்கியமாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதிகமாக தாக்க வாய்ப்புள்ளது. எனவே அவர்கள் சரியாக மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: பத்திரிகை துறையினர் மீதான வழக்குகள் ரத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.