தமிழ்நாடு

tamil nadu

'கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய பொதுப்பணித் துறை மண்டலம்'

By

Published : Nov 22, 2021, 1:30 PM IST

c
c

சென்னை: கோயம்புத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு பொதுப்பணித் துறை மண்டல அலுவலகம் உருவாக்கம் செய்துள்ளதாகத் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது பொதுப்பணித் துறை மானிய கோரிக்கையின் அறிவிப்பில், அமைச்சர் எ.வ. வேலு, பொதுப்பணித் துறையில் சென்னை, திருச்சி மண்டல அலுவலகங்களை மறுசீரமைத்து கோயம்புத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு கூடுதல் மண்டலம் உருவாக்கப்படும் என அறிவித்தார்.

இந்த நிலையில், அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும்விதமாகப் பொதுப்பணித் துறையில் சென்னை, திருச்சி மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களை மறுசீரமைத்து கோயம்புத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு கூடுதல் மண்டலம் உருவாக்கப்பட்டு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், "தலைமைப் பொறியாளர் தலைமையில் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஒன்பது மாவட்டங்கள் உள்ளடக்கிய கோயம்புத்தூர் மண்டல அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக 49 பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

மறுசீரமைப்புக்குப் பின்னர் பொதுப்பணித் துறையின்கீழ் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் என நான்கு மண்டல அலுவலகங்கள், 13 வட்ட அலுவலகங்கள், 56 கோட்ட அலுவலகங்கள், அதனைச் சார்ந்த உபகோட்ட அலுவலகங்கள், பிரிவு அலுவலகங்கள் என இயங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: போர்க்கால அடிப்படையில் பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்படும் - அமைச்சர் எ.வ.வேலு

ABOUT THE AUTHOR

...view details