தமிழ்நாடு

tamil nadu

பெண் தற்கொலை - மருத்துவர்கள் அலட்சியம் காரணமா?

By

Published : Nov 26, 2022, 7:25 PM IST

எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் இருந்த பெண், திருவள்ளூரில் தற்கொலை செய்ததற்கு மருத்துவர்களின் அலட்சியம் எனக்கூற இயலாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் நொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ.59 லட்சம் மதிப்பில் உள் விளையாட்டு அரங்கம் வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட ஆதம்பாக்கம் பகுதியில் அமைக்கும் பணிகளுக்கு இன்று (நவ.26) சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 'எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் இருந்து அதிகாலை 3 மணிக்கு வெளியேறிய பெண், திருவள்ளூரில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த கேள்விக்கு, மருத்துவர்களின் அலட்சியம் இல்லை. எதோ காரணத்தினால் பெண் வெளியே வந்திருக்கலாம்.

அவர் திருவள்ளூருக்கு சென்று உயிரிழந்தால் மருத்துவர்கள் எப்படி காரணம் ஆவார்கள்?' என்றார். தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்து மருந்து தட்டுப்பாடு இருப்பதாக புகார் தெரிவித்தார். எந்த மருத்துவமனைகளிலும் மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை. போதிய அளவில் மருந்துகள் கையிருப்பில் உள்ளன. வேண்டுமானால், நேரில் சென்று ஆய்வு செய்யவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சொன்னதை அப்படியே கிளிப்பிள்ளைப்போல முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், எஸ்.பி.வேலுமணியும் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து மேலும், தமிழகத்தில் 32 மாவட்டங்களில் உள்ள மருந்து கிடங்குகளில் மருந்துகள் கையிருப்பில் உள்ளன என அவர் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details