ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி உயிரிழப்பு

author img

By

Published : Jul 7, 2022, 10:12 PM IST

Updated : Jul 7, 2022, 10:38 PM IST

வாணியம்பாடியில் மகப்பேறு மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்களே செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சிகிச்சையளித்ததால் மனைவி உயிரிழந்ததாக கணவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் உயிரிழப்பு
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

திருப்பத்தூர்: வாணியம்பாடி காமராஜ்புரம் பகுதியை சேர்ந்தவர் மதன் குமார் (20). கூலி தொழிலாளி. இவரது மனைவி சங்கரி (19) நிறைமாத கர்ப்பணி. இவர் இன்று அதிகாலை 4:30 மணியளவில் பிரசவத்திற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து பிரசவ சிகிச்சையின் போது, சிறிது நேரத்திலேயே சங்கிரி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அதிர்ச்சியடைந்த சங்கரியின் உறவினர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒன்றுகூடி, மகப்பேறு மருத்துவர் இல்லாமல் பணியில் இருந்த செவிலியர்கள் மட்டுமே கர்ப்பிணிக்கு சிகிச்சை அளித்ததால் கர்ப்பிணி உயிரிழந்ததாக கூறி முற்றுகையிட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து சங்கிரியின் கணவர் மதன் கூறுகையில், காலை பிரசவத்திற்காக தனது மனைவியை அனுமதித்த போது பிரசவ அறையில் நுழையும் போதே செவிலியர்கள் ஆயிரம் ரூபாய் கேட்டதாகவும், பின்னர் மருத்துவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டே தனது மனைவிக்கு பிரசவம் பார்த்ததால் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி உயிரிழப்பு

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வாணியம்பாடி நகர காவல்துறையினர் கர்ப்பிணியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆசிரியர்கள் நியமனம் செய்ய கோரி போராட்டம் - தற்காலிக ஆசிரியர் நியமனம்

Last Updated : Jul 7, 2022, 10:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.