தமிழ்நாடு

tamil nadu

அரசுப் பள்ளி மைதானத்தை தனியார் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்

By

Published : Dec 16, 2021, 3:18 PM IST

அரசுப் பள்ளி மைதானத்தை தனியார் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தக் கூடாது, அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சாந்தி விஜய் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில், "எங்களது தனியார் பள்ளிக்கு அருகில் அரசுப் பள்ளிக்கு சொந்தமான 2.40 ஏக்கர் நிலத்தில் விளையாட்டு மைதானம் உள்ளது. அந்த மைதானத்தை அரசுப் பள்ளி மாணவர்களும், தனியார் பள்ளி மாணவர்களும் நேரக்கட்டுப்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். கரோனா காலகட்டத்தில் அந்த மைதானம் வணிக பயன்பாட்டிற்கு வந்து விட்டது. உழவர் சந்தை, பட்டாசுக் கடைகள் வைக்கப்பட்டன. விளையாட்டு அல்லாத பல நிகழ்வுகள் அந்த மைதானத்தில் நடைபெற்றது. எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும். அந்த மைதானத்தை தனியார் பள்ளி மாணவர்களும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு இன்று (டிசம்பர் 16) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்துக்குமார் மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் மைதிலி சந்ரு, "விளையாட்டு மைதானத்தில் இதர வணிகப் பயன்பாடு நடவடிக்கைகளுக்கு இனி அனுமதிக்க மாட்டோம். விளையாட்டுக்காக மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும்" என்று தெரிவித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசுப் பள்ளி மைதானத்தை அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தனியார் பள்ளி மாணவர்களை அனுமதிக்கக் கூடாது. மைதானத்தை சுற்றி சுற்றுச் சுவர் எழுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.

சென்னை: நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சாந்தி விஜய் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கில், "எங்களது தனியார் பள்ளிக்கு அருகில் அரசுப் பள்ளிக்கு சொந்தமான 2.40 ஏக்கர் நிலத்தில் விளையாட்டு மைதானம் உள்ளது. அந்த மைதானத்தை அரசுப் பள்ளி மாணவர்களும், தனியார் பள்ளி மாணவர்களும் நேரக்கட்டுப்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். கரோனா காலகட்டத்தில் அந்த மைதானம் வணிக பயன்பாட்டிற்கு வந்து விட்டது. உழவர் சந்தை, பட்டாசுக் கடைகள் வைக்கப்பட்டன.

விளையாட்டு அல்லாத பல நிகழ்வுகள் அந்த மைதானத்தில் நடைபெற்றது. எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும். அந்த மைதானத்தை தனியார் பள்ளி மாணவர்களும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு இன்று (டிசம்பர் 16) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்துக்குமார் மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் மைதிலி சந்ரு, "விளையாட்டு மைதானத்தில் இதர வணிகப் பயன்பாடு நடவடிக்கைகளுக்கு இனி அனுமதிக்க மாட்டோம். விளையாட்டுக்காக மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும்" என்று தெரிவித்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசுப் பள்ளி மைதானத்தை அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தனியார் பள்ளி மாணவர்களை அனுமதிக்கக் கூடாது. மைதானத்தை சுற்றி சுற்றுச் சுவர் எழுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இதையும் படிங்க:ஆம்பூரில் ஆட்டுத் தந்தூரி - வைரல் காணொலி

ABOUT THE AUTHOR

...view details