தமிழ்நாடு

tamil nadu

ஓபிஎஸ், ஈபிஎஸ் போட்டியின்றித் தேர்வு: நீதிமன்றத்தில் நாளை விசாரணை

By

Published : Dec 6, 2021, 8:33 PM IST

ஓபிஎஸ், இபிஎஸ் போட்டியின்றித் தேர்வு

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் முடிவுகளை அறிவிக்கத் தடை கோரிய வழக்கை அவசரமாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னை:அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல் நாளை (டிசம்பர் 7ஆம் தேதி) நடத்தப்படும் என அக்கட்சி அறிவித்திருந்தது.

இந்தநிலையில், அதிமுக கட்சி விதிப்படி 21 நாட்கள் அவகாசம் வழங்காமல் தேர்தல் நடத்தப்படுவதால், தேர்தல் முடிவுகளை அறிவிக்கத் தடை கோரி ஓசூரைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் ஜெயச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதிமுக தலைமையகம்

அவர் தனது மனுவில், இத்தேர்தலில் போட்டியிட எவருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை என்றும், ஒரு கோடியே 50 லட்சம் உறுப்பினர்கள் உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஓபிஎஸ், ஈபிஎஸ்

ஓபிஎஸ், ஈபிஎஸ் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும்

போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் செயல்படுவதாகக் கூறி, தேர்தல் ஆணையத்துக்குப் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் புகார் தெரிவித்துள்ளார்.

இருவரின் நியமனத்துக்கும் ஒப்புதல் அளிக்க தேர்தல் ஆணையத்துக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

தேர்தல் முடிவுகள்

இன்று மாலை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாவதாகக் கூறி, இந்த வழக்கைக் கடைசி வழக்காக அவசரமாக விசாரிக்க வேண்டும் என ஜெயச்சந்திரன் தரப்பில், தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி அமர்வில் முறையிடப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நாளை (டிசம்பர்.7) விசாரிப்பதாகக் கூறியதுடன், இன்றைய நிகழ்வுகள் குறித்துக் கூடுதல் மனுவாகத் தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க: அதிமுக தலைமைப் பதவி: ஓபிஎஸ், இபிஎஸ் போட்டியின்றித் தேர்வு

ABOUT THE AUTHOR

...view details