தமிழ்நாடு

tamil nadu

கரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி

By

Published : Sep 24, 2022, 10:57 PM IST

’கரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு கதனுதவி’ - எம்.எஸ்.எம்.இ கவுன்சில் துணைத் தலைவர்
’கரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு கதனுதவி’ - எம்.எஸ்.எம்.இ கவுன்சில் துணைத் தலைவர் ()

கரோனாவால் பாதிக்கப்பட்டு மூடப்பட்ட நிறுவனங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் ஊக்குவிப்பு கவுன்சில் துணை தலைவர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை:எம்.எஸ்.எம்.இ ஊக்குவிப்பு கவுன்சில் துணை தலைவர் முத்துராமன் டெல்லியில் பதவியேற்ற பின் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மேம்பாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த 2 திட்டங்கள் சிறப்பாக செயல்பட ஒத்துழைப்பு தருவோம்.


சிறு, குறு, நடுத்தர தொழில்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடித்தட்டு மக்களுக்கு தொழில் தொடங்க வங்கிகள் முலம் கடன் உதவி வழங்கப்படும். கரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் முலமாக கடனுதவி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியா முழுவதும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் தொடங்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்திப்பேன். கரோனாவால் பாதிக்கப்பட்ட மில்கள், தொழிற்சாலைகள், ஓட்டல்களில் பல மூடப்பட்டுள்ளன. அவற்றை மீண்டும் தொடங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இஸ்லாமிய மக்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு கேள்விக்குறி - ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details