தமிழ்நாடு

tamil nadu

காந்தி ஜெயந்தி: ஆளுநர், முதலமைச்சர் மரியாதை

By

Published : Oct 2, 2022, 11:51 AM IST

Updated : Oct 2, 2022, 1:30 PM IST

காந்தி ஜெயந்தி: ஆளுநர், முதலமைச்சர் மரியாதை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை:நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்தநாள் இன்று(அக்-2) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் காந்தியின் சாதனைகள் குறித்து நினைவு கூர்ந்துவருகின்றனர்.

அந்த வகையில் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

அதன்பின் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வளாகத்தில் இருக்கும் மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஆளுநரின் முதன்மைச் செயலாளர், அரசு அலுவலர்கள், சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை

இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பேதங்களைக் கடந்து அன்பும், அமைதியும் மிளிரும் சமூகமாக இந்தியாவை உருவாக்கிட உழைத்த அண்ணல் காந்தியார் பிறந்த நாளில், சமத்துவமும் சகோதரத்துவமும் இந்த மண்ணில் தழைத்து, வெறுப்புணர்வைத் தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை; இது காந்திய மண் எனச் சூளுரைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:காந்தி ஜெயந்தி - தலைவர்கள் மரியாதை

Last Updated :Oct 2, 2022, 1:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details