தமிழ்நாடு

tamil nadu

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி 2023; தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட அப்டேட்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 1:54 PM IST

Khelo India Youth Games 2023: தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் - 2023 தொடர்பாக முக்கிய அறிக்கையை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது.

khelo india youth games 2023
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2023

சென்னை: இது தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நாட்டிலுள்ள இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் உடற்தகுதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, மத்திய அரசின் சார்பில் நடத்தப்படுகின்ற ஒருங்கிணைந்த விளையாட்டு நிகழ்வாகும்.

இந்த விளையாட்டுப் போட்டிகள் 17 வயதுக்கு உட்பட்ட மற்றும் 21 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளைக் கொண்டிருந்தது. ஆனால், 2021ஆம் ஆண்டில் ஹரியானாவில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில், 18 வயதுக்குட்பட்ட பிரிவிலும் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இதே போன்று 2022-இல் மத்தியப் பிரதேசத்திலும் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023ஐ தமிழ்நாட்டில் நடத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலைமையில், 2023ஆம் ஆண்டு கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாக நடத்திட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இடம் மற்றும் நாள்: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் - 2023 தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய 4 நகரங்களில், ஜனவரி 19, 2024 முதல் ஜனவரி 31, 2024 வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் சுமார் 5 ஆயிரம் விளையாட்டு வீரர் - வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Demo Game:

  1. தடகளம் (Athletics)
  2. கால்பந்து (Football)
  3. துப்பாக்கி சுடுதல் (Shooting)
  4. வாள்வீச்சு (Fencing)
  5. வாலிபால் (Volleyball)
  6. பளு தூக்குதல் (Weightlifting)
  7. ஸ்குவாஷ் (Squash)
  8. வில்வித்தை (Archery)
  9. ஜூடோ (Judo)
  10. கட்கா (Gatka)
  11. டேபிள் டென்னிஸ் (Table Tennis)
  12. பேட்மிண்டன் (Badminton)
  13. சைக்கிள் ஓட்டுதல் (Cycling)
  14. கோ-கோ (Kho-Kho)
  15. யோகாசனம் (Yogasana)
  16. மல்யுத்தம் (Wrestling)
  17. ஹாக்கி (Hockey)
  18. நீச்சல் (Swimming)
  19. ஜிம்னாஸ்டிக்ஸ் (Gymnastics)
  20. டென்னிஸ் (Tennis)
  21. துப்பாக்கி சுடுதல் (Shooting)
  22. களரிபயட்டு (Kalaripayattu)
  23. மல்லக்கம்பு (Mallakhamb)
  24. கூடைப்பந்து (Basketball)
  25. தாங் தா (Thang Ta)
  26. கபடி (Kabbadi)
  27. சிலம்பம் (Silambam)

மேலும், தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் - 2023-இல் கூடைப்பந்து, கபடி, கோ-கோ, வாலிபால், ஹாக்கி மற்றும் கால்பந்து ஆகியவற்றிற்கான குழு விளையாட்டுகளில், தமிழ்நாட்டு அணியும் இடம்பெற உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் - வீராங்கனைகள், அவர்களின் சிறப்பான செயல்திறனின் அடிப்படையில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழ்நாட்டு அணிகளில் இடம் பெறுவதற்கான தேர்வு போட்டிகள் ஏற்கனவே நடைபெற இருந்த நிலையில், மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. எனவே, கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் நடத்தப்பட உள்ளது.

தேர்வுப் போட்டிகள் விவரங்கள்:

வ.எண் விளையாட்டு பாலினம் இடம் நாள் மற்றும் நேரம்
1. கூடைப்பந்து பெண்கள் மாவட்ட விளையாட்டரங்கம், திருவண்ணாமலை 12.12.2023 - காலை 7 மணி
ஆண்கள் மாவட்ட விளையாட்டரங்கம், திருவண்ணாமலை 13.12.2023 - காலை 7 மணி
2. கால்பந்து பெண்கள் மாவட்ட விளையாட்டரங்கம், திண்டுக்கல் 12.12.2023 - காலை 7 மணி
ஆண்கள் மாவட்ட விளையாட்டரங்கம், திண்டுக்கல்

12.12.2023 - காலை 7 மணி &

13.12.2023 - காலை 7 மணி

3. கபாடி பெண்கள் ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம், சென்னை 12.12.2023 - காலை 7 மணி
ஆண்கள் ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம், சென்னை 13.12.2023 - காலை 7 மணி
4. கோ-கோ பெண்கள் அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி 12.12.2023 - காலை 7 மணி
ஆண்கள் அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி 13.12.2023 - காலை 7 மணி
5. வாலிபால் பெண்கள் அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி 12.12.2023 - காலை 7 மணி
ஆண்கள் அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி 13.12.2023 - காலை 7 மணி
6. ஹாக்கி பெண்கள் டாக்டர். எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கம், மதுரை 12.12.2023 - காலை 7 மணி
ஆண்கள் டாக்டர். எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கம், மதுரை 13.12.2023 - காலை 7 மணி

இதில் தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர் - வீராங்கனைகளுக்கு திறமை மற்றும் திறன்களை மேம்படுத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், அந்தந்த விளையாட்டுப் பிரிவுகளில் தகுந்த பயிற்சி அளிக்கப்படும். பங்கேற்பதற்குத் தகுதிபெற, விளையாட்டு வீரர்கள் வயதுச் சரிபார்ப்பு செயல்முறைக்கு பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் இரண்டினை சமர்ப்பிக்க வேண்டும்.

  • ஆதார் அட்டை அல்லது பாஸ்போர்ட்
  • பள்ளிக் கல்விச் சான்றிதழ் (SSLC/10ஆம் வகுப்பு)
  • பிறப்புச் சான்றிதழ் (குறைந்தது 5 ஆண்டுகளுக்கு முன்பு, மாநகராட்சி அல்லது கிராம பஞ்சாயத்து மூலம் ஜனவரி 1, 2013 அன்று அல்லது அதற்கு முன் வழங்கப்பட்டது)

தகுதியுள்ள அனைத்து விளையாட்டு வீரர் - வீராங்கனைகளும் தேர்வுப் போட்டிகளில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்" என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளின் தற்போதைய நிலை என்ன? மாநகராட்சி வெளியிட்ட முக்கிய தகவல்!

ABOUT THE AUTHOR

...view details