தமிழ்நாடு

tamil nadu

நகை வியாபாரியிடம் கொள்ளை - ஈரானிய கொள்ளையர்கள் கைது

By

Published : Jan 18, 2020, 3:29 PM IST

சென்னை: ஆந்திரா நகை வியாபாரியிடம் டெல்லி காவலர்கள் எனக் கூறி 4.3 கிலோ தங்கக் கட்டிகளைக் கொள்ளையடித்த ஈரானிய கொள்ளையர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

theft
theft

ஆந்திராவைச் சேர்ந்த நகை வியாபாரி தினேஷ் என்பவர் கடந்த 12ஆம் தேதி சென்னையில் சுமார் 4.3 கிலோ தங்கக் கட்டிகளை வாங்கியுள்ளார். அதன்பின் தங்கக் கட்டிகளை பையில் வைத்துக் கொண்டு வால்டாக்ஸ் சாலையில் நடத்து சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த நான்கு பேர் தாங்கள் டெல்லி காவல் துறையினர் என்று பொய் கூறி தினேஷிடமிருந்து தங்கக் கட்டிகளை பறித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து தினேஷ் என்பவர் அளித்த புகாரின் போரில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். தங்கக் கட்டிகளை கொள்ளையடித்து சென்றவர் ஈரானிய கொள்ளையர்கள் என்பதை காவல் துறையினர் கண்டறிந்தனர். பின் மத்தியப் பிரதேசம் சென்ற காவல் துறையினர் ஹசன், அபுஹைதர் அலி, சாதிக், ஹைதர் ஆகிய நான்கு பேரையும் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 700 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க: நெஞ்சில் பாய்ந்த பந்து - சிறுவன் உயிரிழந்த பரிதாபம்

Intro:Body:

*சென்னை வால்டாக்ஸ் சாலையில் ஆந்திரா தங்க நகை வியாபாரியிடம் 4.3 கிலோ தங்கம் பறித்து சென்ற வழக்கில் 4 ஈரானிய கொள்ளையர்கள் கைது*


சென்னை செளக்கார்பேட்டையில் தங்கம் வாங்க வந்த ஆந்திராவைச் சேர்ந்த தினேஷ் என்பவரிடம் டெல்லி போலீஸ் போல நடித்து 4.3 கிலோ தங்கத்தை பறித்து சென்ற நான்கு ஈரானிய கொள்ளையர்கள் கைது.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஈரானிய கொள்ளையர்கள் ஹசன், அபுஹைதர் அலி, சாதிக், ஹைதர் ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் மத்திய பிரதேசத்தில் வைத்து கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் 1 கிலோ 700 கிராம் தங்கம் பறிமுதல் செய்துள்ளனர்.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details