ஆந்திரப் பிரதேசத்தில் கர்னூல் மாவட்டத்தில் உள்ள அடோனி பகுதியில் வசித்துவந்த மோஹின் (10) என்ற சிறுவன், தனது நண்பர்களுடன் கிரிக்கெட் மைதானத்திற்குச் சென்றுள்ளான். அப்போது, மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டியைக் காண தனது இரண்டு நண்பர்களுடன் சென்றுள்ளான். அப்போது, பேட்ஸ்மேன் அடித்த பந்து நேராக மோஹின் நெஞ்சில் பட்டுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த மோஹின், மைதானத்திலேயே சுருண்டு விழுந்துள்ளான். இதைப் பார்த்த மோஹின் நண்பர்கள், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலே பரிதாபமாக மோஹின் உயிரிழந்தார்.
இதுகுறித்து காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றர். கிரிக்கெட் பந்தால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பொங்கல் சாப்பிட்ட குழந்தைகள் உயிரிழப்பு - திருப்பத்தூரில் சோகம்