தமிழ்நாடு

tamil nadu

பாரத் நெட் திட்டம் மூலம் 12 ஆயிரம் கிராமங்களுக்கு இணைய சேவை!

By

Published : Oct 20, 2021, 1:04 PM IST

பாரத் நெட் திட்டம்,  அமைச்சர் மனோ தங்கராஜ்
பாரத் நெட் திட்டம்

பாரத் நெட் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராமங்களுக்கு இணையச் சேவை வழங்கும் ஒப்பந்தம் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் கையெழுத்தானது.

சென்னை:தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் ( TANFINET ) மூலம் தமிழ்நாட்டில் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தைச் செயல்படுத்தப்படவுள்ள நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் இன்று (அக்.20) கையெழுத்தானது.

இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப துறை முதன்மைச் செயலர் நீரஜ் மித்தல், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கமல் கிஷோர் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், "பாரத் நெட் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம பஞ்சாயத்துகளைக் கண்ணாடி இழை கம்பி வடம் மூலம் இணைத்து, அதிவேக இணைய வசதி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ரூ. 1815.32 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் 1Gbps அளவிலான அதிவேக இணைய வசதி வழங்கப்படும்.

அரசின் திட்டங்கள் விரைந்து மக்களைச் சென்றடையும்

ஒன்று மற்றும் இரண்டாம் திட்டம் குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளதால் மூன்று மற்றும் நான்காம் தொகுப்பு திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது. ஓராண்டுக்குள் பணிகளை முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் அதிவேக இணையதள சேவையினைப் பெற முடியும். இத்தகைய சேவைகளை வழங்குவதன் மூலம், ஊரக வேலைவாய்ப்பு மற்றும் அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களை விரைந்து சென்றடைய வழி வகுக்கும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: மாவட்டங்களில் வளர்ச்சி பணிகளை தீவிரப்படுத்த ஸ்டாலினின் பக்கா பிளான்!

ABOUT THE AUTHOR

...view details