தமிழ்நாடு

tamil nadu

Corona virus: சென்னையில் மீண்டும் கட்டுப்பாட்டு பகுதி.. அதிகரிக்கும் கரோனாவால் மாநகராட்சி அதிரடி!

By

Published : Apr 7, 2023, 2:20 PM IST

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் வீடுகளில் மீண்டும் தனிமைப்படுத்துதல் அறிவிப்புக்கான நோட்டீஸை மாநகராட்சி ஒட்டியுள்ளது.

COVID virus
கரோனா

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா அதிகரித்து வரும் நிலையில் தினசரி பாதிப்பு 300-ஐ நெருங்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் கரோனா பாதிக்கப்படுபவர்களின் தினசரி எண்ணிக்கை 98-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கரோனா பரவல் விகிதம்7.9 ஆக அதிகரித்துள்ளது.

விழிப்புணர்வு:கரோனா பரவலை கட்டுபடுத்துவதற்கு அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் அதிக கூட்டம் கூடும் காற்றோட்டம் இல்லாத இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள், இணை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த இடங்களில் மருத்துவர்கள், நோயாளிகள், நோயாளியுடன் வருபவர்கள் என அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

மேலும், கூட்டம் அதிகம் கூடக்கூடிய, மூடிய அரங்குகள் பகுதிகளில் முக கவசம் அணிய வேண்டும். தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் மற்றவருடன் நேரடியாக தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டுமென பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சுகாதார பணியாளர்களிடம் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பரிசோதனை:சென்னையில் தற்போது வரை சராசரியாக 900 கரோனா பரிசோதனை தினமும் மேற்கொண்டு வருகின்றனர். இதனை குறைந்தபட்சமாக 1080 ஆக கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சிக்கு சுகாதார இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.

ஸ்டிக்கர் ஒட்டுதல்:விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமின்றி ஒரே பகுதியில் கரோனா பரவாமல் இருக்க (cluster) கரோனா பாதிக்கப்பட்ட வீட்டின் முன்பு ஸ்டிக்கர் ஒட்டும் பணியினை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

வதந்திகளை நம்ப வேண்டாம்:சென்னை மாநகராட்சி கரோனா தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை எனவும், தமிழ்நாடு அரசு எந்த அறிவிப்பை வெளியிடுகிறதோ அதை மாநகராட்சி பின்பற்றுவது மட்டுமே தற்போது நடைமுறையில் உள்ளது. எனவே வீண் வதந்திகளை நம்ப வேண்டாம், பரப்பவும் வேண்டாம் என மாநகராட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'காவல் உதவி' மையத்திற்கு நாள்தோறும் 12,000 அழைப்புகள்.. பெண் எஸ்.பி. கூறிய புதிய தகவல்கள்!

ABOUT THE AUTHOR

...view details