தமிழ்நாடு

tamil nadu

நியாய விலைக் கடையில் பிரதமரின் படத்தை அகற்றியவர மீது பாஜக புகார்

By

Published : May 12, 2022, 12:39 PM IST

நியாய விலைக் கடையில் இருந்த பிரதமர் மோடியின் படத்தை அகற்றி சேதப்படுத்திய நபர் மீது பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்
நியாய விலைக் கடையில் இருந்த பிரதமர் மோடியின் படத்தை அகற்றி சேதப்படுத்திய நபர் மீது பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் ()

சென்னை மேடவாக்கம் நன்மங்கலம் நியாயவிலைக் கடையில் இருந்த பிரதமர் மோடியின் படத்தை அகற்றியவர் மீது பாஜகவினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

சென்னை: மேடவாக்கம் அடுத்த நன்மங்கலத்தில் உள்ள நியாய விலைக் கடையில் (KG015) பிரதமர் நரேந்திர மோடி படம் இல்லாமல், முன்னாள் மற்றும் இன்னாள் முதலமைச்சர் படம் மட்டும் இருப்பதை கண்ட பாஜகவினர் பிரதமர் மோடியின் படத்தை நியாய விலைக் கடையில் மாட்டியுள்ளனர்.

நியாய விலைக் கடையில் இருந்த பிரதமர் மோடியின் படத்தை நன்மங்கலம் ஊராட்சி தலைவர் திமுகவை சேர்ந்த கிரி மற்றும் துணைத் தலைவர் கார்த்தி உட்பட சிலர் கழட்டி சேதப்படுத்தி கீழே வீசியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தங்களையும், பெண் நிர்வாகிகளையும் நன்மங்கலம் ஊராட்சியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜகவினர் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து பிரதமர் மோடியின் படத்தை அகற்றி சேதப்படுத்திய நன்மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 50 க்கும் மேற்பட் பாஜகவினர் பள்ளிகரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையும் படிங்க:ரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள் - பிரதமர் மோடி புகழஞ்சலி!

TAGGED:

rationshop

ABOUT THE AUTHOR

...view details