தமிழ்நாடு

tamil nadu

நிவர் புயல் மீட்புப் பணியில் ராணுவம், கடலோரக் காவல்படை...!

By

Published : Nov 25, 2020, 8:07 PM IST

சென்னை: நிவர் புயல் மீட்புப் பணியில் ராணுவம், கடலோர காவல் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் மீட்புப் பணி கடலோர காவல்படை  நிவர் புயல் மீட்புப் பணி ராணுவம்  Army, Coast Guard in Nivar storm rescue operation  Coast Guard in Nivar storm rescue mission  Nivar Storm Rescue Mission Army  நிவர் புயல் மீட்புப் பணியில் ராணுவம், கடலோரக் காவல்படை  Coast Guard  Army
Coast Guard in Nivar storm rescue mission

நிவர் புயல் பாதிப்பை எதிர்கொள்ள இந்திய கடலோரக் காவல்படையின் நான்கு ரோந்து வாகனங்கள் நிவாரணப் பொருள்களுடன் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தயார் நிலையில் உள்ளதாக கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளது.

கடுமையான பாதிப்புகளுக்கு மத்தியிலும் ரோந்துக் கப்பல்கள் பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய ராணுவப் படையினரும் நிவர் புயல் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணி ஈடுபடுத்தப்பட்டுள்ள கடலோரக் காவல்படை

இதற்காக சென்னை, புதுச்சேரியில் தலா 8 குழுக்களும், திருச்சியில் 6 குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பெங்களூருவிலிருந்து 8 ராணுவ குழுக்களும், கோவையிலிருந்து 2 குழுக்களும், சென்னையிலிருந்து 12 குழுக்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'விசைப்படகுகள் அனைத்தும் கரைகளில் நிறுத்திவைப்பு'

ABOUT THE AUTHOR

...view details