தமிழ்நாடு

tamil nadu

3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன

By

Published : Aug 11, 2021, 5:15 PM IST

புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 3 லட்சத்து 60 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி சென்னை வந்தடைந்தது.

கோவிஷீல்டு தடுப்பூசிகள்
கோவிஷீல்டு தடுப்பூசிகள்

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்கக்கோரி ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.

அரசின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசும் தமிழ்நாட்டிற்கு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. மக்களும் கரோனா தடுப்பூசியை ஆர்வமுடன் செலுத்திக் கொள்கின்றனர்.

கோவிஷீல்டு தடுப்பூசிகள்

30 பார்சல்களில் தடுப்பூசி

இன்று (ஆக.12) புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் மத்திய தொகுப்பிற்கு 30 பார்சல்களில் 3 லட்சத்து 60 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. இதை சுகாதாரத்துறை அலுவலர்கள் சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் மருந்து கிடங்கிற்க்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: கோவிஷீல்டு - கோவாக்சின் கலவை குறித்த ஆய்வுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்!

ABOUT THE AUTHOR

...view details