தமிழ்நாடு

tamil nadu

மேல்நிலை துணைத் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்: அரசுத் தேர்வுகள் இயக்ககம்

By

Published : Sep 12, 2020, 6:19 PM IST

சென்னை: மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகளுக்கான அனுமதிச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

11and12-exam-private-candidates-can-download-their-hall-11and12-exam-private-candidates-can-download-their-hall-ticketticket
11and12-exam-private-candidates-can-download-their-hall-ticket

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ''செப்டம்பர், அக்டோபர் - 2020 மேல்நிலை முதலாமாண்டு இரண்டாமாண்டு துணைத் தேர்வுகளுக்கு தனித் தேர்வர்கள் தங்களின் அனுமதிச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நடைபெறவுள்ள செப்டம்பர் / அக்டோபர் 2020, மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உள்பட) தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை 15.09.2020 (செவ்வாய்கிழமை) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதே போன்று, 26.03.2020 அன்று நடைபெறாமல் ரத்து செய்யப்பட்ட வேதியியல், புவியியல், கணக்குப் பதிவியல் மற்றும் தொழிற் கல்வி, கணக்குப் பதிவியல் (பழைய பாடத்திட்டம்) பாடங்களுக்கான மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வினை எழுத ஏற்கனவே விண்ணப்பித்திருந்த தனித்தேர்வர்களும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்ப எண் இல்லாத காரணத்தால் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை பதிவிறக்கம் செய்ய இயலாத தேர்வர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று முதலில் “HALL TICKET” என்ற வாசகத்தினை ‘‘Click’’ செய்தால் தோன்றும் பக்கத்தில் உள்ள ““HSE SEPTEMBER 2020 PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD” என்ற வாசகத்தினை ‘Click’ செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) / நிரந்த பதிவெண் (Permanent Register No.) மற்றும் பிறந்த தேதியினை (Date of Birth) பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேல்நிலை முதலாமாண்டு (+1 Arrear) மற்றும் இரண்டாமாண்டு (+2) துணைத் தேர்வுகள் இரண்டையும் எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து, ஒரே தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மட்டும் வழங்கப்படும்.

செய்முறைத் தேர்வுள்ள பாடங்களில் தேர்ச்சி பெறாதோருக்கான குறிப்பு செய்முறைத் தேர்வுள்ள பாடங்களில் தேர்ச்சி பெறாதோருக்கான குறிப்பு ஏற்கனவே எழுத்து தேர்வெழுதி, எழுத்து தேர்வு மற்றும் அகமதிப்பீடு ஆகிய இரண்டிலும் சேர்த்து 35 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்று, செய்முறைத் தேர்வில் பங்கேற்காத காரணத்தால் தேர்ச்சி பெறாதவர்கள், தற்போது செய்முறைத் தேர்வில் மட்டும் பங்கேற்க வேண்டும். அவ்வகை தேர்வர்கள் மீண்டும் எழுத்துத் தேர்வினை எழுத வேண்டாம்.

ஏற்கனவே செய்முறைத் தேர்வில் பங்கேற்காமல், எழுத்து தேர்வு மற்றும் அகமதிப்பீடு ஆகிய இரண்டிலும் சேர்த்து 35 மதிப்பெண்ணுக்கும் குறைவாக தேர்ச்சி பெறாதவர்கள் தற்போது எழுத்து தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு ஆகிய இரண்டையும் கட்டாயம் எழுதவேண்டும்.

செய்முறைத் தேர்வு செய்ய வேண்டிய தனித்தேர்வர்கள், கருத்தியல் தேர்வு (Theory Exam) நடைபெறும் நாட்களுக்கு முன்னரே தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி செய்முறைத் தேர்வு (Practical Exam) நடைபெறும் தேதி குறித்த விவரத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

உரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். செப்டம்பர் / அக்டோபர் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை (TIME TABLE) www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:10ஆம் வகுப்பு தனித் தேர்வர்கள் ஹால்டிக்கெட் எப்போது பதிவிறக்கம் செய்யலாம்?

ABOUT THE AUTHOR

...view details