தமிழ்நாடு

tamil nadu

ஆண் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பது பொய் - பாடகி சின்மயி வேதனை!

By

Published : Nov 24, 2022, 1:50 PM IST

Chinmayi Sripaada

சென்னை கே.கே.நகர் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவரை சக மாணவர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவத்துக்கு பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை: சென்னை கே.கே.நகர் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவரின் பேச்சு, பாவனையை கிண்டல் செய்த சக மாணவர்கள், மாணவரை பிறப்புறுப்பில் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துக்கு பாடகி சின்மயி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "சென்னையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவரை, உடன் படிக்கும் 4 மாணவர்கள், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கொடுமைப்படுத்தியும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியும் வந்துள்ளனர். கழிவறைக்கு அழைத்துச் சென்று கொடுமையாக தாக்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுவன் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எல்லோரையும் பார்த்து பயப்படும் நிலையில் இருக்கிறார். பத்தாம் வகுப்பு மாணவர்கள் இதுபோல நடந்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. மாணவர் இதிலிருந்து வெளிவர எத்தனை வருடங்கள் ஆகும் என்று தெரியவில்லை. ஆனால், மாணவர் மீண்டு வருவார் என நம்புகிறேன், அதற்காக பிரார்த்தனை செய்கிறேன்.

தயவு செய்து உங்கள் மகன்களிடம் பேசுங்கள். அவர்கள் பள்ளியில் பாதுகாப்பாக இருக்கிறார்களா? அவர்களது நடத்தையில் மாற்றம் உள்ளதா? அவர்கள் பயப்படுகிறார்களா? என்பதை கவனியுங்கள். ஆண் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய பொய். பெண் குழந்தைகளைப் போலவே, ஆண் குழந்தைகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 10-ம் வகுப்பு மாணவன் பிறப்புறுப்பில் தாக்குதல்.. சென்னை மத்திய அரசுப்பள்ளியில் கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details