தமிழ்நாடு

tamil nadu

PARALYMPICS: உயரம் தாண்டுதலில் வெள்ளி; நிஷாத் குமார் அசத்தல்

By

Published : Aug 29, 2021, 5:47 PM IST

Updated : Aug 29, 2021, 7:42 PM IST

பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்று, இந்தியாவிற்கு இரண்டாவது பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார்.

நீஷாத் குமார், Nishad Kumar
நீஷாத் குமார்

டோக்கியோ: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெற உள்ள தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், பாரா உயரம் தாண்டுதல் போட்டியின் டி-47 பிரிவில் நடைபெற்ற பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் நிஷாத் குமார் பங்கேற்றார்.

தகர்ந்தது ஆசிய சாதனை

இப்போட்டியில், தனது முதல் முயற்சிலேயே 2.02 மீட்டர் உயரத்தைத் தாண்டிய நிஷாத், அடுத்த முயற்சியில் 2.06 மீட்டரை இரண்டு முயற்சிகள் எடுத்து தாண்டினார். 2.06 மீட்டர் உயரத்தைத் தாண்டியதின் மூலம் ஆசிய சாதனையை நிஷாத் முறியடித்தார்.

இரண்டாவது வெள்ளி

இதன்பின்னர், அடுத்த இலக்கான 2.09 மீட்டரை மூன்று முயற்சிகள் எடுத்தும் அவரால் அந்த உயரத்தைத் தாண்ட இயலவில்லை. இதனால், இரண்டாவது இடத்தைப் பிடித்த நிஷாத், டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான இரண்டாவது வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.

முன்னதாக, மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல் இன்று வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாரா ஒலிம்பிக்: வெள்ளி வென்றார் பவினாபென் படேல்

Last Updated : Aug 29, 2021, 7:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details