தமிழ்நாடு

tamil nadu

PARALYMPIC BADMINTON: பிரமோத் பகத் அரையிறுதிக்கு முன்னேற்றம்

By

Published : Sep 2, 2021, 5:22 PM IST

பிரமோத் பகத், Pramod Bhagat

பாரா ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டனில் இந்திய வீரர் பிரமோத் பகத், உக்ரைன் வீரரை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

டோக்கியோ: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் 5ஆம் தேதிவரை நடைபெறும் இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

பாரா ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் விளையாட்டு முதல்முறையாக டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில்தான் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், பாரா பேட்மிண்டனில் மட்டும் இந்தியா சார்பில் 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், பிரமோத் பகத் பாரா பேட்மிண்டனில் உலக அளவில் முதல் தர வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டிகள்

இதில், நேற்று (செப்டம்பர் 1) நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் பிரமோத் பகத், பாலக் கோலி ஆகியோர் முதல் சுற்றில் தோல்வியடைந்திருந்தனர். மேலும், நேற்று ஆடவர் குரூப் - ஏ ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற போட்டியில் (எஸ்எல்-3) இந்தியாவின் மனோஜ் சர்கார், பிரமோத் பகத் இருவரும் மோதினர். இதில், பிரமோத் 3-0 என்ற செட் கணக்கில் மனோஜ் சர்காரை வீழ்த்தியிருந்தார்.

நேர் செட்டில் வெற்றி

இந்நிலையில், ஆடவர் குரூப்- ஏ ஒற்றையர் (எஸ்எல்-3) பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத், உக்ரைன் வீரர் ஒலக்சாண்டர் சிர்கோவ் உடன் இன்று மோதினார்.

மொத்தம் 26 நிமிடம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரமோத் 21-12, 21-9 என்ற நேர் செட் கணக்கில் உக்ரைன் வீரரை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற்றியுள்ளார். பிரமோத் பகத், ஒற்றையர் பிரிவில் நிச்சயம் பதக்கம் வெல்வார் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பதக்கப்பட்டியலில் இந்தியா

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை, 2 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 10 பதக்கங்களைப் பெற்று 36ஆவது இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க: PARALYMPIC CANOE SPRINT: அரையிறுதியில் பிராச்சி யாதவ்

ABOUT THE AUTHOR

...view details