ETV Bharat / sports

டாஸ் வென்று லக்னோ பந்துவீச்சு தேர்வு! பிளே ஆப் சுற்றில் நீடிக்குமா மும்பை இந்தியன்ஸ்! - IPL 2024 MI vs LSG Match Highlights

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 30, 2024, 7:08 PM IST

Updated : Apr 30, 2024, 7:20 PM IST

Etv Bharat
Etv Bharat

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளது.

லக்னோ: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.30) லக்னோ அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெறும் 48வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இனி வரும் ஆட்டங்களில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டும் பிளே சுற்றில் மும்பை அணியால் தொடர முடியும்.

வலுவான நிலையில் உள்ள லக்னோ அணியுடன் இன்று மும்பை அணி மோதுகிறது. லக்னோவில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும். இதனால் மும்பை அணியின் வெற்றியை அதன் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

லக்னோ அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமடையும். இதனால் வெற்றிக்கு லக்னோ அணி கடுமையாக மல்லுக்கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையான விளையாடுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல்:

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: கே.எல். ராகுல் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஆஷ்டன் டர்னர், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக், மொஹ்சின் கான், மயங்க் யாதவ்.

மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நேஹால் வதேரா, டிம் டேவிட், முகமது நபி, ஜெரால்ட் கோட்ஸி, பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா.

இதையும் படிங்க: 20 ஓவர் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! - T20 World Cup India Squad

Last Updated :Apr 30, 2024, 7:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.