டெல்லி:ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. அர்ஜூனா விருது பெறுவதற்கு தகுதியான வீரர், வீராங்களைகளை ஒவ்வொரு விளையாட்டுச் சங்கமும் தேர்ந்தெடுத்து, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தன.
அந்த வகையில், கடந்த ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி, 26 பேருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு, இன்று ராஷ்ட்ரபதி பவனில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் விளையாட்டு வீராங்கனை ஆர்.வைஷாலிக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அர்ஜூனா விருது, சான்றிதழை வழங்கினார்.