ETV Bharat / sports

ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டி: 10மீ துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்குத் தங்கம்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 4:25 PM IST

10மீ துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்
10மீ துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்

Asian Olympic Qualifier Game: ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய அணி 10மீ துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

ஹைதராபாத்: ஜகார்டாவில் ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா ஆடவர் 10மீ துப்பாக்கி சுடுதல் போட்டியில், தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இந்தியத் துப்பாக்கி சுடுதல் அணியில் வருண் தோமர் 586 புள்ளிகளும், அர்ஜூன் சிங் சீமா 579 புள்ளிகளும், உஜ்ஜாவால் மாலிக் 575 புள்ளிகளும் மொத்தமாக 1740 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம் பிடித்தது.

ஈரான் மற்றும் கொரியா அணிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. வருண் மற்றும் அர்ஜுன் சிங் ஆகியோர் தனி நபர் துப்பாக்கி சுடுதலில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர். அதே நேரத்தில் தோமர் வெள்ளிப் பதக்கம் வென்றார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் 16 இடங்கள் உள்ள நிலையில், 10மீ துப்பாக்கி சுடுதலில் ஆடவர் மற்றும் பெண்கள் என சேர்த்து நான்கு இடங்கள் பங்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காயம் காரணமாக ரஃபேல் நடால் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகல்..!

அதில் அதிகபட்சமாக இந்தியத் துப்பாக்கி சுடுதல் அணிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்கள் துப்பாக்கி சுடுதல் 10மீ அணியில் இந்திய அணிக்கு ஈஷா சிங், ரிதம் சங்வான், சுர்பி ராவ் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். மொத்தம் 26 நாடுகளிலிருந்து 385 விளையாட்டு வீரர்கள், ஜகார்டா செனாயன் துப்பாக்கி சுடுதல் தளத்தில் 256 பதக்கங்களுக்காகப் பங்கேற்கின்றனர். இந்திய அணி ஒலிம்பிக்கில் இதுவரை 13 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடர்.. இந்திய அணியில் ரோகித், கோலிக்கு இடம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.