தமிழ்நாடு

tamil nadu

KKR vs CSK: கொல்கத்தா பேட்டிங்; சாம் கரன் ரிட்டன்ஸ்

By

Published : Sep 26, 2021, 3:24 PM IST

IPL 2021 MATCH 38 KKR vs CSK TOSS UPDATE, dhoni, morgan, csk vs kkr, dhoni morgan, தோனி, மார்கன்

கொல்கத்தா - சென்னை அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் இயான் மார்கன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

அபுதாபி: 'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர் பாதியில் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.

இதையடுத்து, இரண்டாம் கட்டப் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கின. இந்நிலையில், 38ஆவது லீக் ஆட்டத்தில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இன்று (செப். 26) மோதுகிறது.

கொல்கத்தாவில் மாற்றமில்லை

இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. கொல்கத்தா அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், சென்னை அணியில் டுவைன் பிராவோவுக்கு பதிலாக சாம் கரன் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: இயான் மோர்கன் (கேப்டன்), சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, சுனில் நரைன், தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸ்ஸல், பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா.

சென்னை சூப்பர் கிங்ஸ்: எம்.எஸ். தோனி (கேப்டன்), ஃபாப் டூ ப்ளேசிஸ், ரூதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, மொயின் அலி, ரவிந்திர ஜடேஜா, சாம் கரன், தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், ஜோஷ் ஹசில்வுட்.

இதையும் படிங்க: SRH vs PBKS: கடைசி ஓவர் வரை பரபரப்பு; இம்முறை பஞ்சாப் வெற்றி

ABOUT THE AUTHOR

...view details