தமிழ்நாடு

tamil nadu

India Vs Afghanistan : டாஸ் வென்று ஆப்கான் பேட்டிங் தேர்வு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 1:40 PM IST

India Vs Afghanistan Toss : டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 9வது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி பேட்டிங்கை தேர்வு செய்து உள்ளார்.

India
India

டெல்லி : இந்திய அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இதில் இன்று (அக். 11) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 9வது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி பேட்டிங்கை தேர்வு செய்து உள்ளார்.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல் :

இந்தியா : ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, சூர்யகுமார் யாதவ், ஷர்துல் தாக்கூர்.

ஆப்கானின்ஸ்தான் : ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹாக் ஃபாரூக்கி, அப்துல் ரஹ்மான் அல்குர்ஹில், இப்ராஹிம் சத்ரான் ஹசன், நூர் அகமது.

இதையும் படிங்க :World Cup Cricket 2023 : தாக்குபிடிக்குமா ஆப்கானிஸ்தான்? இந்தியாவுடன் இன்று மோதல்!

ABOUT THE AUTHOR

...view details