தமிழ்நாடு

tamil nadu

விபிஎப் கட்டணம் 50% குறைப்பு - டிக்கெட் விலை குறையுமா?

By

Published : Sep 7, 2021, 6:25 AM IST

மூன்று மாதங்களுக்கு விபிஎப் கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிப்பதாக க்யூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Theatre
Theatre

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களின் படங்களுக்கு மூன்று மாதங்களுக்கு குறிப்பிட்ட விழுக்காடு VPF கட்டணம் சலுகையை க்யூப் நிறுவனம் அளித்துள்ளது.

தற்போது திரையரங்குகளில் திரைப்படங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் திரையிடப்படுகின்றன. அதற்கான கட்டணங்களை தயாரிப்பாளர்கள்தான் செலுத்தி வருகின்றனர். இந்த கட்டணத்தை வாரமுறை மற்றும் லைப்டைம் என இருமுறைகளில் க்யூப் நிறுவனம் பெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த டிஜிட்டல் நிறுவனத்துடன் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளனர். அதில் மூன்று மாதங்களுக்கு விபிஎப் கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிப்பதாக க்யூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கரோனா ஊரடங்கால் பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தன. கடந்த வாரம்தான் ஒரு சில திரையரங்குகள் திறக்கப்பட்டன.

தற்போது க்யூப் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் திரையரங்குகள் தங்களது டிக்கெட் விலையை குறைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details