தமிழ்நாடு

tamil nadu

'கண்ணான கண்ணே' - யூ-ட்யூபில் சாதனை படைக்கும் அஜித் பாடல்

By

Published : Oct 13, 2021, 1:20 PM IST

கண்ணான கண்ணே

விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் யூ-ட்யூப் தளத்தில் சாதனை படைத்துவருகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம், விஸ்வாசம். அஜித், நயன்தாரா நடித்திருந்த இப்படம் அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமாகக் கொண்டாடப்பட்டது.

விவேக், அனிகா, கோவை சரளா, தம்பி ராமையா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார். இமான் படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்நிலையில் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் பலருக்கும் விருப்பமான ஒன்று.

தந்தை-மகள் பாசத்தை வெளிக்காட்டும்விதமாக வெளியாகியுள்ள இந்தப் பாடலின் வரிகளைத் தாமரை எழுத, சித்ஸ்ரீராம் பாடினார். இதனிடையே கண்ணான கண்ணே பாடல் யூ-ட்யூப் தளத்தில் தற்போதுவரை 150 மில்லியனுக்கும் அதிகமான (15 கோடி) பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துவருகிறது. இதனைப் படக்குழுவினர் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

தந்தை - மகள் பாசம் குறித்த வெளியான தமிழ் பாடல்களிலே, இப்பாடலுக்கு என ரசிகர்கள் மனத்தில் எப்போது தனி இடம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'ஏஜிபி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ABOUT THE AUTHOR

...view details