'ஏஜிபி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

author img

By

Published : Oct 12, 2021, 8:45 PM IST

லட்சுமி மேனன்

நடிகை லட்சுமி மேனன் நடிக்கும் 'ஏஜிபி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகை லட்சுமி மேனன் நடிப்பில் இறுதியாக புலிக்குத்தி பாண்டி திரைப்படம் வெளியானது. இதனையடுத்து அவரது நடிப்பில் உருவாகிவரும் படம், ஏஜிபி.

ஸ்கீசஃப்ரீனியா (Schizophrenia) என்கிற மனச்சிக்கல் கொண்ட பெண்ணாக அதில் அவர் நடித்துவருகிறார். கற்பனை உலகையும் மெய்யான உலகையும் ஒன்றை மற்றொன்றாக மாறுபடக் கருதுதலும், பெரும்பாலும் விசித்திரமான, எதிர்பாராத முறைகளில் நடந்துகொள்ளும் மனநோய் வகை ஆகும்.

'நாய்கள் ஜாக்கிரதை ' பட இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ரமேஷ் சுப்ரமணியன் இப்படத்தை இயக்குகிறார்.

ஏஜிபி போஸ்டர்
ஏஜிபி போஸ்டர்

இந்நிலையில் ஏஜிபி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா, விமல், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர்கள் சக்தி சௌந்தர்ராஜன், சிம்புதேவன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஜாங்கோ பட ட்ரெய்லர் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.