தமிழ்நாடு

tamil nadu

பட்ஜெட் விலையில் 50 எம்பி கேமரா... மோட்டோவின் அசத்தல் ஸ்மார்ட்போன் அறிமுகம்...

By

Published : Apr 25, 2022, 2:24 PM IST

Updated : Apr 25, 2022, 4:59 PM IST

மோட்டோரோலாவின் மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் 50 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், 5000mAh பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

moto-g52-with-90hz-poled-display-triple-rear-cameras-launched-in-india
moto-g52-with-90hz-poled-display-triple-rear-cameras-launched-in-india

டெல்லி: மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான மோட்டோ ஜி52 இன்று (ஏப். 25) இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி 10 பவர், ஓப்போ கே10, ரியல்மி 9ஐ போன்களுக்கு இணையான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

அந்த வகையில், 90Hz POLED டிஸ்ப்ளே, 50 எம்பி பிரைமரி கேமரா, ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், 6 ஜிபி ரேம், 128ஜிபி ரோம் எனப் பல்வேறு அம்சங்கள் நிறைந்துள்ளன. இந்த போன் ஐரோப்பிய சந்தையில் ரூ.20,000 விலையில் முன்னதாக அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இந்தியாவில் இதன் விலை பயனர்களை ஆச்சரியத்தில் மூழ்கவைத்துள்ளது.

மோட்டோ ஜி52 சிறப்பம்சங்கள்

  • POLED பஞ்ச் ஹோல் டாட் டிஸ்ப்ளே (6.6 இன்ச் முழு HD)
  • 90Hz ரெப்ரெஷ் ரேட்
  • 360Hz டச் சம்ப்ளிங் ரேட்
  • ஸ்னாப்டிராகன் 680 SoC சிப்செட்
  • 50 எம்பி முதன்மை கேமரா (8 எம்பி அல்ட்ரா வைட், 2 எம்பிமேக்ரோ கேமரா)
  • 16 எம்பி செல்ஃபி கேமரா
  • 5000mAh பேட்டரி (30W ஃபாஸ்ட் சார்ஜிங்)
  • 4 ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ்
  • 4G LTE, Wi-Fi 802, புளூடூத் v5.0 இணைப்புத்திறன்
  • டைப் -சி சார்ஜிங்
  • 3.5mm ஹெட்ஃபோன் ஜாக்
  • Accelerometer, Ambient light, Gyroscope, Magnetometer, Proximity சென்சார்கள்
  • சைடு-மௌண்டேட் பின்கேர்ப்ரின்ட் சென்சார்
  • 160.98x74.46x7.99mm அளவிலான வடிவமைப்பு
  • 169 கிராம் எடை
  • வண்ணங்கள் (சார்கோல் கிரே, பார்ஸலைன் ஒயிட்)

இந்தியாவில் மோட்டோ ஜி52 விலை மற்றும் சலுகைகள்

  • ரூ. 14,499 ( 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ரோம்)
  • ரூ. 16,499 (6ஜிபி + 128 ஜிபி ரோம்)

பிளிப்கார்ட் மூலம் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். மே 27ஆம் தேதி முதல் சில்லறைக் கடைகளில் விற்பனைக்கு வரும். எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1,000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல Axis வங்கி டெபிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 5% விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:வாட்ஸ்-அப்பில் வாயைப் பிளக்க வைக்கும் புது அப்டேட்ஸ்...

Last Updated :Apr 25, 2022, 4:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details