தமிழ்நாடு

tamil nadu

2,048இல் 160 கோடி; ஆனால் 2,100இல் 109 கோடி - மக்கள் தொகை குறித்த ஆய்வில் தகவல்!

By

Published : Jul 18, 2020, 5:55 AM IST

இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 138 கோடியாக உள்ளது. அதுவே 2,100ஆம் ஆண்டில் 32 விழுக்காடு குறைந்து 109 கோடியாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

மக்கள் தொகை
மக்கள் தொகை

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சியாளர்கள் மக்கள் தொகை குறித்து ஆராய்ச்சி நடத்தினர். 2017 உலகளாவிய நோய்ப் பாதிப்பு குறித்த ஆராய்ச்சி தகவல்கள் மற்றும் இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 183 நாடுகளுக்கான எதிர்கால உலகளாவிய தேசிய மக்கள் தொகை; அவற்றின் இறப்பு, கருவுறுதல், இடம்பெயர்வு விகிதங்களை திட்டமிட புதிய மாதிரிகள் ஆகியவற்றைக் கொண்டு, இந்த பகுப்பாய்வை ஆராய்ச்சியாளர்கள் செய்துள்ளனர்.

அதனடிப்படையில் மக்கள் தொகையில் 2100-க்குள் சீனா, இந்தியா, நைஜீரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் பல நாடுகள் போட்டியிடுவதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மக்கள் தொகை 2048ஆம் ஆண்டில் 160 கோடியாக உயரும் என்றும்; அதுவே 2100ஆம் ஆண்டில் 32 விழுக்காடு குறைந்து 109 கோடியாகும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இரண்டு இருக்கைகளை முன்பதிவு செய்யும் வசதி இண்டிகோவில் அறிமுகம்

2017ஆம் ஆண்டு இந்தியாவில் வேலைக்குத் தகுதியான வயதுடைய நபர்கள் 76.2 கோடியாக இருந்த நிலையில், 2100ஆம் ஆண்டில் அது 57.8 கோடியாக குறையும் என்றும்; சீனாவில் 2017ஆம் ஆண்டில் வேலைக்குத் தகுதியான வயதுடைய நபர்கள் 95 கோடியாக இருந்த நிலையில், 2100ஆம் ஆண்டில் 35.7 கோடியாக குறையும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details