தமிழ்நாடு

tamil nadu

வாட்டிவதைக்கும் வெயிலால் உண்டாகும் தொற்று நோய்க்கு குட்பை சொல்வோம்...!

By

Published : Mar 25, 2019, 3:04 PM IST

summer special

கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு உண்டாகும் தொற்று நோய்களிலிருந்து, அவர்களைக் காப்பாற்ற நம்முன்னோர்கள் பாரம்பரியமாக அருந்திவந்த பானகத்தை வீட்டிலேயே செய்துகொடுக்கலாம். இதனால், நமது உடலுக்கு எவ்வளவு நன்மைகள் ஏற்படும் என்பதை பார்ப்போம்.

நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயலிலும் ஒரு மருத்துவ குணம் உள்ளது. உதாரணமாக கோடைகாலத்தில் ஏற்படும் களைப்பை விரட்ட பானகத்தை அதிகம் குடிப்பார்கள். இதனால் உடலுக்கு எவ்வளவு நன்மைகள் ஏற்படும் தெரியுமா? பழரசத்தை விட வெயிலுக்கு உகந்தது பானகம்தான்.

கால்சியம்+இரும்புச்சத்து +விட்டமின்கள் + எனர்ஜி = பானரகம்.

வெயிலுக்கு பானகம் அருந்தும்போது உடனடி சக்தி நமது உடலுக்குக் கிடைக்கிறது. நடைபயணம் போகும்போதும் களைப்பாக வீடு வந்தடையும்போதும் நாம் அருந்தும்பானகமானது உடலுக்குத் தேவையான சக்தியைத் தரம்.

கால்சியத்தை சுக்கிலிருந்தும்,இரும்புச்சத்து, அமினோஅமிலங்களை பனைவெல்லத்திலிருந்தும்,உணவுக் குழலில் ஏற்படும் தொற்றுகள், செரிமானத்தை சரி செய்ய ஏலக்காயும், எலுமிச்சை பழத்திலுள்ள சிட்ரிக் அமிலம் உடலின் நிலைத்தன்மையை உருவாக்குவதும், அதைப்பற்றித் தரவுகளும் நம் அனைவருக்கும் தெரிந்ததே.

பானகத்தின் பயன்கள்

புளியிலிருக்கும் வைட்டமின் 'சி'யானது பனைவெல்லத்துடன் வினைபுரிந்து உடனடி எனர்ஜியை உடலுக்கு அளிக்கிறது. வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு நமது மரபைப் போற்றும் பானகத்தை கொடுக்க முயல்வோம்.

அதன்மூலம் வெப்பத்தால் உருவாகும் நோய்த் தொற்றுகளை தவிர்ப்போம்.இதன்மூலம் உடலுக்கு நோய்களை உற்பத்தி செய்யும்பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களை தவிர்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • புளி - சிறிய எலுமிச்சை அளவிலான உருண்டை
  • பனைவெல்லம் அல்லது வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
  • ஏலக்காய் பொடி - 1/4 டீ ஸ்பூன்
  • சுக்குப்பொடி - 1/4 டீ ஸ்பூன்
  • மிளகுத்தூள் - 1/4 டீ ஸ்பூன்
  • தண்ணீர் - 2 கப்

செய்முறை:

1. வெல்லத்தைத் தட்டி பொடியாக்கிக்கொள்ளவும். புளியை இரண்டு கப் தண்ணீரில் நன்கு கரைக்கவும்.

2. கரைத்த புளிநீரில் வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் முழுவதுமாக கரையும்படி ஸ்பூன் கொண்டு கலக்கிவிடவும். வெல்லம் முழுமையாக கரைந்தபின் வடிகட்டியால் வடிகட்டவும்.
3. இதனுடன் ஏலக்காய்ப் பொடி, சுக்குப்பொடி, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும். இதை அப்படியே அல்லது சிறிது நேரம் மண்பானையில் வைத்திருந்து பருகவும்.

4. மிளகு, சுக்கு தொண்டைபிடிப்பை குணமாக்கும் நல்ல மருந்து. சளியையும் குணப்படுத்தும். கோடையில் வெயிலினால் ஏற்படும் உடல் சூட்டையும், களைப்பையும்பானகம் பருகிஓட ஓட விரட்டுங்கள்.

Intro:Body:

பானகம்  பருகிடுங்கள்  தொற்று நோயை விரட்டிடுங்கள்....



#பானகம் 

கோடைகாலத்தில் ஏற்படும் களைப்பை விரட்டும் பானம் - பானகம்!!!!



#பழரசத்தை விடவெயிலுகந்தது பானகம் தான் ... கால்சியம்+இரும்புச்சத்து +விட்டமின்கள் + எனர்ஜி = பானகம்



வெயிலுக்கு பானகம் அருந்தும் போது instant energy கிடைக்கிறது நடைப்பயணம் போகும் போது கழைப்பாக வீடு வந்தடையும்,போது நாம் அருந்தும்



பானகமானது உடலுக்கு தேவையான கால்சியத்தை சுக்கிலிருந்தும்,



இரும்புச்சத்தை அமினோஅமிலங்களை பனைவெல்லத்திலிருந்தும்,



#ஏலக்காயிலிருந்து உணவு குழாயில் ஏற்படும் தொற்றுகளையும் செரிமானத்தை சரி செய்வதும்,



#எலுமிச்சம்பழத்திலுள்ள சிட்ரிக் அமிலம் உடலின் நிலைதன்மையை உருவாக்குவதும் அதை பற்றி தரவுகள் அனைவருக்கும் தெரிந்ததே,



புளியிலிருக்கும் விட்டமின் C யானது பனைவெல்லத்துடன் வினை புரிந்து உடனடி எனர்ஜியாக உடலுக்கு அளிக்கிறது அதுமட்டுமல்ல சுக்கு மிக சிறந்த வினையூக்கி உடலுக்கு என்பதை நாமெல்லாம் அறிந்த செய்தி......



#வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு நமது #மரபை போற்றும் பானகத்தை கொடுக்க முயல்வோம் அதன் மூலம் வெப்பத்தால் உருவாகும் #நோய்_தொற்றுக்களை தவிர்ப்போம்...



இதன் மூலம் உடலுக்கு #நோய்களை_உற்பத்தி #செய்யும் 

#பன்னாட்டு #கம்பெனிகளின் #குளிர்பானங்களை #தவிர்க்கவே #முயல்வோம் .



பானகத்திற்கான #தேவையானபொருட்கள் :



புளி - சிறிய எலுமிச்சை அளவிலான உருண்டை

பனைவெல்லம் அல்லது வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் பொடி - 1/4 டீ ஸ்பூன்

சுக்குப்பொடி - 1/4 டீ ஸ்பூன்

மிளகுத்தூள் - 1/4 டீ ஸ்பூன்

தண்ணீர் - 2 கப்



#செய்முறை :



1. வெல்லத்தை தட்டி பொடியாக்கிக்கொள்ளவும். புளியை 2 கப் தண்ணீரில் நன்கு கரைக்கவும். 

2. கரைத்த புளிநீரில் வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் முழுவதுமாக கரையும்படி ஸ்பூன் கொண்டு கலக்கிவிடவும். வெல்லம் முழுமையாக கரைந்தபின் வடிகட்டியால் இறுக்கவும். 

3. இதனுடன் ஏலக்காய்பொடி, சுக்குப்பொடி, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும். இதை அப்படியே அல்லது சிறிது நேரம் மண்பானையில் வைத்திருந்து பருகவும். 

4. மிளகு மற்றும் சுக்கு தொண்டைபிடிப்பை குணமாக்கும் நல்ல மருந்து. சளியையும் குணப்படுத்தும். கோடையில் #வெயிலினால் ஏற்படும் #உடல் உஷ்ணத்தையும், #களைப்பையும் 

பானகம் பருகி 

ஓட ஓட #விரட்டுங்கள்!!!!!


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details