தமிழ்நாடு

tamil nadu

ட்விட்டர் வாசிகளுக்கு குஷி நியூஸ்... ஃப்ளீட்டில் அறிமுகமான ஸ்டிக்கர் வசதி!

By

Published : Apr 2, 2021, 2:32 PM IST

twitter

சான் பிரான்சிஸ்கோ: ட்விட்டரில் உள்ள ஃப்ளீட்டில் புதிதாக ஸ்டிக்கர் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்னாப்சாட், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப்பைத் தொடர்ந்து, ஸ்டோரி ஆப்ஷனை ட்விட்டரும் கொண்டுவந்திருக்கிறது. இதை 'ஃப்ளீட் (Fleet)' என்று அழைக்கிறது. ட்விட்டரில் அனைவருக்கும் இந்த 'ஃப்ளீட்' காட்டப்படாது.

அந்தப் பயனாளியின் கணக்கில் நுழைந்தால் காணலாம் அல்லது இன்ஸ்டாகிராம் போல அவர்களைப் பின்தொடருபவரின் முகப்பு பக்கத்தில் மேலே இந்த ஃப்ளீட்கள் அடுக்கப்பட்டிருக்கும். இதில் பயனர்கள் ட்வீட் செய்யும் தகவல்கள் 24 மணி நேரத்தில் தானாக மறைந்துவிடும். இதனை லைக்கோ, ரீட்வீட்டோ செய்ய முடியாது. தனிப்பட்ட முறையில் கமெண்ட் மட்டும்தான் செய்ய முடியும்.

இந்நிலையில், ஃப்ளீட்டில் ஸ்டிக்கர் அம்சத்தை ட்விட்டர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ரிப்ளை செய்வது போலவே, டிவிட்டரின் ஃப்ளீட்டிலும் ஸ்டிக்கர் அனுப்பி ரிப்ளை செய்ய முடியும். உங்களின் பதிவில் ஸ்டிக்ரையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த வசதியானது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் தளங்களுக்கு கொடுக்கப்படவுள்ளது.

ஃப்ளீட்டில் அறிமுகமான ஸ்டிக்கர் வசதி

ட்விட்டர் சொந்தமாக அனிமேஷன் ஸ்டிக்கர்கள், ஈமோஜிகள் தொகுப்பை வைத்துள்ளது. இதனை 'ட்வெமோஜி' என அழைக்கின்றனர். இதில், விருப்பப்ட்ட ஸ்டிக்கர்களை பயனாளர்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.

இதையும் படிங்க:இனி நண்பர்கள் பதிவுகளை நியூஸ் ஃபீடில் முதலில் பார்க்கலாம் - ஃபேஸ்புக் புதிய அப்டேட்

ABOUT THE AUTHOR

...view details