தமிழ்நாடு

tamil nadu

மகளுக்குத் துரோகம் செய்த தாய் - மருமகனையும் தீர்த்துக்கட்டிய கொடூரம்

By

Published : Oct 30, 2020, 5:47 PM IST

Updated : Oct 30, 2020, 7:34 PM IST

தனது தாயுடன் கணவன் நெருக்கமாக இருப்பதைக் கண்ட மனைவி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இதனால் பெண்ணின் தாயுடன் திருமணத்தைத் தாண்டிய உறவை முறித்துக்கொண்டார், கணவன். இதில் ஆத்திரமடைந்த மாமியார், மருமகனை கொலை செய்தார்.

Mother in law kills son in law
Mother in law kills son in law

ஹைதராபாத் (தெலங்கானா): மாமியாருடன் ஏற்பட்ட திருமணத்தைத் தாண்டிய உறவின் காரணமாக இருவரின் உயிர் பறிபோயுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹைதராபாத்தில் உள்ள உப்பல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரமந்தாபூரில் அனிதா என்ற பெண்மணி தனது மருமகனை கொலை செய்துள்ளார். பின்னர் மீர்பேட் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இளம்பெண்ணை ஆபாசமாக படமெடுத்த இளைஞர் கைது!

அனிதாவின் மகளுக்கு இந்த ஆண்டில் நவீனுடன் திருமணம் நடந்துள்ளது. மகளின் கணவருடன் நெருக்கமாகப் பழகிய அனிதா திருமணத்தைத் தாண்டிய உறவில் இருந்துள்ளார். இதனையறிந்து மனமுடைந்த அனிதாவின் மகள், தற்கொலை செய்து தன் உயிரை மாய்த்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக நவீனை கைதுசெய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் முன்னிறுத்தியபின் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து பிணை பெற்ற நவீன் வீடு திரும்பியுள்ளார். நவீன் சிறையிலிருந்து வெளியே வந்ததையறிந்த அனிதா, அவரை மீண்டும் தொடர்புகொண்டு திருமணத்தைத் தாண்டிய உறவில் இருக்க முயற்சித்துள்ளார்.

பப்ஜி விளையாட்டை முற்றிலும் தடைசெய்த அரசு!

ஆனால் நவீனோ, மனைவி இறந்ததைக் காரணம் காட்டி, மாமியார் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். இதனையறிந்து கொண்ட மாமியார் அனிதா, நவீனை கொலை செய்யத் திட்டமிட்டு, வீட்டுக்கு வரவழைத்து கொலை செய்துள்ளார்.

Last Updated :Oct 30, 2020, 7:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details