தமிழ்நாடு

tamil nadu

சட்டவிரோதமாக காய்ச்சப்படும் கள்ளச்சாராயம் - ட்ரோன் கேமரா மூலம் தீவிரக் கண்காணிப்பு

By

Published : Apr 29, 2020, 1:47 PM IST

சென்னை: திருநீர் மலைப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவது அதிகரித்ததையடுத்து ட்ரோன் கேமரா மூலம் தீவிரக் கண்காணிப்பில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

camera
camera

ஊரங்கு உத்தரவை அடுத்து மாநிலம் முழுவதும் மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுவுக்கு அடிமையான சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக திருநீர் மலையை ஒட்டியுள்ள கல்குவாரி, அடையாறு ஆற்றுப் பகுதிகள், ஆள் நடமட்டம் இல்லாத முள்வெளிப் பகுதிகள் என அங்கு சிலர் கள்ளச்சாராய ஊறல்களை பதுக்கியுள்ளனர்.

இதனையடுத்து தகவலறிந்த சங்கர் நகர் காவல் துறையினர், அப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்ற 6 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பிறகும், சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக வந்த தகவலையடுத்து தனிக்குழு அமைக்கப்பட்டு திருநீர் மலை மற்றும் அதன் சுற்றியுள்ளப் பகுதிகளில் காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது சேசு ராஜ் என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்ச ஊறல் போட்டதாக கைது செய்யப்பட்டார். அவர் வைத்திருந்த ஊறல்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், சேசு ராஜை காஞ்சிபுரத்தில் உள்ள சிறையில் அடைத்தனர்.

சட்டவிரோதமாக காய்ச்சப்படும் கள்ளச்சாராயம் - ட்ரோன் கேமரா மூலம் தீவிரக் கண்காணிப்பு

இதனையடுத்து, திருநீர் மலைப் பகுதி முழுவதும் புனித தோமையார் மலை காவல் துணை ஆணையர் பிரபாகர் மற்றும் உதவி ஆணையர் தேவராஜ் தலைமையில் ட்ரோன் கேமரா மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: சென்னையில் அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்ற 4 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details