தமிழ்நாடு

tamil nadu

பிரிட்டன் உள்துறைச்செயலாளர் சுயெல்லா டோவரில் புலம்பெயர்ந்தோர் மையங்களில் ஆய்வு!

By

Published : Nov 4, 2022, 5:26 PM IST

புலம்பெயர் மக்கள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய பிரிட்டன் உள்துறை செயலாளர் சுயெல்லா பிரவர்மேன், டோவரில் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடந்த இடத்தில் ஆய்வு செய்தார். சர்ச்சை பேச்சால் நெருக்கடியில் சிக்கிய அவர், அதனை சமாளிக்கும் வகையில் டோவருக்கு சென்றதாக தெரிகிறது.

UK
UK

லண்டன்: வெளிநாட்டினர் பலர், இங்கிலிஷ் கால்வாயை சிறிய படகுகள் மூலம் கடந்து, பிரிட்டனில் குடியேறுவது தொடர்ந்து வருகிறது. பிரிட்டனின் மான்ஸ்டன் நகரில் உள்ள பழைய விமான நிலையமானது புலம் பெயர்ந்தவர்களுக்கு தற்காலிக செயலாக்க மையமாக இருக்கிறது. அங்கு ஆயிரக்கணக்கான புலம்பெயர் மக்கள் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், பிரிட்டன் உள்துறைச்செயலாளர் சுயெல்லா பிரவர்மேன், மான்ஸ்டனில் உள்ள புலம்பெயர்ந்தோருக்களுக்கான செயலாக்க மையத்தில் கடந்த 1ஆம் தேதி ஆய்வுமேற்கொண்டார். அங்கு புலம்பெயர்ந்த மக்களுக்கான அடிப்படை வசதிகள், பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, 1,600 பேர் தங்கக்கூடிய இடத்தில் 3,500 பேர் தங்கி இருந்ததைக்கண்டார்.

ஆய்வின்போது பேசிய சுயெல்லா, புலம்பெயர்ந்த மக்களின் வருகையைப் பிரிட்டன் தெற்கு கடற்கரை மீதான அத்துமீறிய படையெடுப்பு என்று கூறினார். அதோடு பிரிட்டனில் சட்டவிரோத குடியேற்றம் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் குறிப்பிட்டார். இவர்களை அகதிகள் எனக்கூற வேண்டாம் என்றும், அவர்களில் பலர் குற்றச்சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்றும் குற்றம்சாட்டினார்.

இவரது இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர் மக்களை படையெடுப்பாளர்கள் என விமர்சித்த சுயெல்லாவுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு பிரிட்டனுக்கு புலம் பெயர்ந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் அல்பேனியர்கள் எனத் தெரிகிறது. குற்றச்சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என சுயெல்லா கூறியது அல்பேனியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சுயெல்லாவின் பேச்சு பைத்தியக்காரத்தனமானது என அல்பேனிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதனால் சுயெல்லாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு டோவரில் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோரின் மையங்களில் நேற்று(நவ.3) சுயெல்லா நேரில் ஆய்வு செய்தார். ஆனால், அப்போது அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கவில்லை.

இதையும் படிங்க:பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு

ABOUT THE AUTHOR

...view details