ETV Bharat / international

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு

author img

By

Published : Nov 3, 2022, 5:16 PM IST

Updated : Nov 3, 2022, 6:02 PM IST

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

Firing in Imran Khan's container rally in Pakistan, 5 injured
Firing in Imran Khan's container rally in Pakistan, 5 injured

வாஜிராபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் வாஜிராபாத்தில் நடந்துள்ளது. இம்ரான் கான் தனது கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடன் லாகூரில் உள்ள லிபர்ட்டி சவுக்கிலிருந்து இஸ்லாமாபாத் வரை மிக்பெரும் பேரணியை தொடங்கினர்.

இந்த பேரணி வாஜிராபாத்தில் நடந்துகொண்டிருந்தபோது, இம்ரான் கான் நின்றுகொண்டிருந்த கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் இம்ரான் கான் உள்பட 5 பேருக்கு குண்டடிபட்டது. அதைத்தொடர்ந்து 5 பேரும் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாஜிராபாத்தில் பதற்றம் நிலவிவருகிறது. பாகிஸ்தானில் பொருளாதார சீர்கேடு, பணவீக்கம், விலை வாசி உயர்வு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டங்களும், எதிர்ப்புகளும் கிளம்பின. இதனிடையே இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மார்ச் 28ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தன.

அதைத்தொடர்ந்து இம்ரான் கானின் பிடிஐ கட்சிக்கு அளித்த ஆதரவை எம்கியூஎம் (முத்தாஹிதா குவாமி இயக்கம்) கட்சி விலக்கிக்கொள்வதாக அறிவித்தது. இதனால், இம்ரான் கான் கட்சி பெரும்பான்மை இழந்த கலைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் மாதம் இம்ரான் கான் பதவி விலகினார். அதன்பின் பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக, முன்னாள் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்றார்.

இந்த நிலையிலேயே இம்ரான் கான் பாகிஸ்தானில் புதிய பொது தேர்தலை அறிவிக்கக்கோரி பேரணி நடத்த தொடங்கினார். இந்த பேரணியின்போதே அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் அவருக்கு வலது காலில் குண்டடிபட்டதாக கூறப்படுகிறது. அதேபோல இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதையும் படிங்க: வடகொரியாவின் ஏவுகணை தாக்குதல்; தென்கொரியா மக்களுக்கு எச்சரிக்கை

Last Updated : Nov 3, 2022, 6:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.