தமிழ்நாடு

tamil nadu

பயனர்களின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஏற்ற ட்விட்டர் நிறுவனம்!

By

Published : Aug 10, 2022, 12:40 PM IST

பயனர்களின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஏற்ற ட்விட்டர் நிறுவனம்!
பயனர்களின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஏற்ற ட்விட்டர் நிறுவனம்!

பயனர்களின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஏற்ற ட்விட்டர் நிறுவனம், உள் அமைப்புகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சான் பிரான்சிஸ்கோ: ட்விட்டரைப் பயன்படுத்தும்போது 33,000 க்கும் மேற்பட்ட பயனர்கள் சில சிக்கல்களை எதிர்கொள்வதாக புகார் அளித்தனர். குறிப்பாக ஒரு பயனர், “எனது ட்விட்டர் தளம் செயலிழப்பின்போது, ​​api.twitterstat.us பச்சை நிறத்தில் 'அனைத்து அமைப்புகளும் செயல்படும்' என்பதைக் காட்டியது. இது எனக்கு சற்று எரிச்சலூட்டுவதாக இருந்தது" என எழுதியுள்ளார்.

அதேபோல், “இதனாலேயே எலன் மஸ்க் உங்களை வாங்க வேண்டியிருந்தது” என வேறொரு பயனர் குறிப்பிட்டிருந்தார். ஒட்டுமொத்தமாக 65 சதவீத பயனர்கள் ட்விட்டர் தளத்தில் நுழைய முடியாமலும், 34 சதவீத பயனர்கள் சிக்கல்களை எதிர்கொண்ட நிலையிலும் இருந்தனர்.

இந்நிலையில், “உள் அமைப்புகள் மாற்றம் காரணமாக ட்விட்டர் சிக்கலை சந்தித்துள்ளது. தற்போது அதனை சரி செய்துவிட்டோம்” என ட்விட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:எலான் மஸ்க் நடத்திய வாக்கெடுப்பு - ட்விட்டரை நம்ப மறுக்கிறார்களா பயனாளர்கள்...?

ABOUT THE AUTHOR

...view details