தமிழ்நாடு

tamil nadu

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது; படகுகள் சிறைபிடிப்பு

By

Published : Jul 9, 2023, 12:34 PM IST

இலங்கையின் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து படகுகளையும் சிறைபிடித்தனர்.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது

கொழும்பு (இலங்கை):தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, படகுகளை பறிமுதல் செய்யும் நிகழ்வு சமீபகாலமாக அதிகளவில் நடந்து வருகிறது. அந்த வகையில் இலங்கையின் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மீன்பிடித்தடைக் காலம் முடிந்து தற்போது மீன்பிடி சீசன் தொடங்கி உள்ள நிலையில், ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த சில நாட்களாக ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் இரண்டு படகுகளையும் சிறைப்பிடித்தனர். 15 பேரும் காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 22 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இனிமேல், எல்லைதாண்டி வந்து மீன்பிடிக்கக்கூடாது, அவ்வாறு மீண்டும் கைதானால் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் மீனவர்களை விடுதலை செய்யப்பட்டனர்.

ராமேஸ்வரம் பகுதி உடன் இணைந்து இருந்த கச்சத்தீவு பகுதி 1974, 1976ஆம் ஆண்டு உடன்படிக்கையின்படி இலங்கைக்கு வழங்கப்பட்டது. அதிலும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற ஒப்பந்தத்தின் படியே வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தில் ராமேஸ்வரம், நாகப்பட்டினம் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி அடிக்கடி கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்களும் அதிகளவில் நடந்துள்ளன. இதுகுறித்து தமிழக அரசு சார்பில் மத்திய அரசிற்கு பல முறை கடிதங்களும் எழுதப்பட்டு உள்ளன. கடந்த மாதம் கூட ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதங்கள் எழுதினார். அதனைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் இலங்கை அரசிடம் பேசினர். அதன் பின்பு இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் விடுவிக்க உத்தரவிட்டது. பின் மீனவர்கள் 9 பேரும் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Pro Khalistan protest: பிரிட்டன், கனடாவில் இந்தியத் தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details