தமிழ்நாடு

tamil nadu

2023 உலக கோப்பை இறுதி போட்டியை காண வரும் ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 18, 2023, 5:55 PM IST

Australian Deputy PM to watch India-Australia World Cup final: இந்தியா - ஆஸ்திரேலியா இரு நாடுகளுக்கு இடையிலான 2 + 2 அமைச்சர்கள் பேச்சு வார்த்தைகாக இந்தியா வரவுள்ள ஆஸ்திரேலியாவின் துணை பிரதமர் ரிச்சர்ட மார்லஸ், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தை காண உள்ளார்.

australian-deputy-pm-richard-marles-to-watch-india-australia-world-cup-2023-final
2023 உலகக் கோப்பை இறுதி போட்டி: ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் காண உள்ளார்...

டெல்லி :இந்தியா - ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையேயான "2+2" அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுவதற்காக இந்தியா வந்து உள்ள ஆஸ்திரேலியா துணைப் பிரதமர் ரிச்சர்ட மார்லஸ், நாளை (நவ. 19) நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை காண உள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது படி, "ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வார் எனத் தெரிவித்துள்ளது. மேலும், திங்கட்கிழமை (நவ.20) நடைபெறவுள்ள அமைச்சர்கள் பேச்சு வார்த்தையில் ஆஸ்திரேலியா துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வோங் இந்தியா - ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையேயான பேச்சு வார்த்தையில் கலந்து கொள்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையேயான 2 + 2 பேச்சுவார்த்தையில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இந்தியா சார்பாகத் தலைமை தாங்க உள்ளனர். மேலும் ஆஸ்திரேலியா துணைப் பிரதமரும் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் இந்தியா வருகை குறித்து இன்று (நவ.18) அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையேயான இரண்டாவது 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை ஆகும். இதில், ஆஸ்திரேலியா துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் உடன் இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இணைந்து தலைமை தாங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 20ஆம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்கு முன்பு இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா நாடுகள் இடையேயான அமைச்சர்கள் பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளின் பாதுகாப்பு, பரஸ்பர நலன் சார்ந்த பிரச்சனை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்ற பேச்சுவார்த்தை 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா - ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே நடைபெற்றது. மேலும் அமெரிக்கா உடன் 2023 நவம்பர் 10ஆம் தேதி டெல்லியில் இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையேயான பேச்சு வார்த்தையில் பரஸ்பர தளவாடங்கள் ஆதரவு ஒப்பந்தம் (MLSA) குறித்து விவாதிக்கப்படவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி இரு நாடுகளில் ராணுவ தளங்கள் புதுப்பித்து ராணுவ பொருட்கள் பரிமாற்றம் மற்றும் ஒட்டுமொத்த பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரிக்க உதவுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்களே காரணம்: இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details