இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்களே காரணம்: இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Desk

Published : Nov 14, 2023, 9:21 PM IST

Former President his brothers responsible for economic crisis Sri Lanka SC

Sri Lanka Supreme Court: இலங்கை அரசின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, அவரது சகோதரர்களான பிரதமர், நிதியமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளே காரணம் என்று இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று (நவ.14) தீர்ப்பு வழங்கியுள்ளது.

கொழும்பு (இலங்கை): இலங்கை அரசின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, அவரது சகோதரர்களான பிரதமர், நிதியமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளே காரணம் என்று இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று (நவ.14) தீர்ப்பு வழங்கியுள்ளது.

இலங்கையில் கடந்த வருடம் வரலாறு காணாத அளவுக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் இலங்கை முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. இதனையடுத்து அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பிரதமர் மஹிந்த ராஜபக்சே மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே ஆகிய மூன்று சகோதரர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் இவர் இலங்கையைவிட்டு வெளியேறியுள்ளனர்.

  • Sri Lankan #SupremeCourt ruled that ex-President #GotabayaRajapaksa, his brothers PM and Finance Minister and top officials were responsible for country’s economic crisis that lead to country’s bankruptcy.

    The five-judge-bench of the apex court held former President, who fled… pic.twitter.com/hYHpu00PDG

    — IANS (@ians_india) November 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த நிலையில் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று (நவ.14) இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குப் பொருளாதாரத்தைத் தவறாகக் கையாண்ட முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே மற்றும் இலங்கை மத்திய வங்கி முன்னாள் கவர்னர் அஜித் நிவாத் உட்பட உயர் அதிகாரிகள் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதையும் படிங்க: இலங்கை கடற்பகுதியில் திடீர் நிலநடுக்கம்! தமிழகத்திற்கு சுனாமி எச்சரிக்கையா?

இந்த நிலையில் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) என்ற உரிமைக் குழு, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் 13 நபர்களுக்கு எதிராக இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரணை செய்த ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றம் இன்று (நவ.14) தீர்ப்பு வழங்கியது. இதில், "இலங்கை பொருளாதார நிலைக்கு கோத்தபய ராஜபக்சே, மஹிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே மற்றும் இலங்கை மத்திய வங்கி முன்னாள் கவர்னர் அஜித் நிவாத் கப்ரால், முன்னாள் கருவூலச் செயலாளர் ஜயசுந்தர உட்படப் பல அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிட்டு அவர்கள் காரணம் என தீர்ப்பு வழங்கியுள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அதிபர் பிரதமர் நிதியமைச்சர் மற்றும் அதிகாரிகளின் தவறான வரிச் சலுகைகள் வழங்கியது. கோவிட் - 19 தொற்றின் போது நிர்வாகம் சரியாக கையாளாதது மற்றும் அதிகப் பணம் அச்சிட்டது போன்றவையே இலங்கையின் மிக மோசமான பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுத்தியது எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ரிஷி சுனக்கிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்! இங்கிலாந்து அரசியலில் ஆட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.