தமிழ்நாடு

tamil nadu

உக்ரைன் அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசா?

By

Published : Mar 18, 2022, 5:55 PM IST

அமைதிக்கான நோபல் பரிசிற்கு, உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் உக்ரைனிய மக்களுக்கு பல ஐரோப்பிய நாடுகளின் அரசியல் தலைவர்கள் நோபல் பரிசு கமிட்டியிடம் பரிந்துரை செய்துள்ளனர்.

உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி
உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி

உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகியப் பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வழங்கப்படும் நிலையில், ஏனைய விருதுகள் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகின்றன.

நடப்பாண்டு விருது பரிந்துரைகள் முடிவடைந்துவிட்டன. மேலும், இந்தாண்டுக்கான விருதுகள் அக்டோபர் 3 முதல் அக்டோபர் 10 வரை அறிவிக்கப்பட உள்ளது.

கடைசித் தேதியை மாற்றவும்

இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசுக்கு உக்ரைன் அதிபரையும், உக்ரைனிய மக்களையும் சேர்க்க வேண்டும் என ஐரோப்பாவின் முன்னாள் மற்றும் தற்போதைய அரசியல் தலைவர்கள் நோபல் கமிட்டியிடம் பரிந்துரை செய்துள்ளனர்.

மேலும், அவர்கள் மார்ச் 11ஆம் தேதியிட்டு அனுப்பியுள்ள அறிக்கையில், "அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரையின் கடைசி நாளை மார்ச் 31ஆம் தேதிவரை நீட்டிக்க வேண்டும். அதன்மூலம், அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரையில் உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் உக்ரைன் மக்களைச் சேர்க்க இயலும். மேலும், கமிட்டி இந்த பரிந்துரையை மீண்டும் திறந்து, நடைமுறையை மறுபரிசீலனை செய்யவேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளது.

மொத்தம், 2022-இன் அமைதிக்கான நோபல் பரிசுக்கு 251 தனிநபர்களும், 92 அமைப்புகளும் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜப்பானில் அதிபயங்கர நிலநடுக்கம்... தடம் புரண்ட புல்லட் ரயில்...

ABOUT THE AUTHOR

...view details